உலகத் திறன் போட்டிகளில் சாதனை; பரிசுத்தொகை வழங்கி முதல்வர் விஜய் பாராட்டு

சென்னை: சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற 48வது உலகத் திறன் போட்டியில் இந்தியா 10வது இடத்தைப் பிடித்து வரலாற்றுச் சாதனைப் படைத்துள்ளது. இந்திய அணி மொத்தம் 26 பதக்கங்களை (6 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 20 சிறப்புப் பதக்கங்கள்) வென்று அசத்தியுள்ளது.

முதல்வர் விஜய் இன்று (அக்டோபர் 27) தலைமைச் செயலகத்தில், சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற உலகத் திறன் போட்டிகளில் சிறப்புத் தகுதிப் பதக்கங்களை வென்றவர்களுக்குத் தலா 5 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

வெள்ளிப் பதக்கம் வென்ற ஒருவருக்கும், சிறப்புத் தகுதிப் பதக்கங்களை வென்ற 4 நபர்களுக்கும், போட்டிகளில் பங்கேற்ற 7 நபர்களுக்கும் என தமிழகத்தை சேர்ந்த மொத்தம் 12 போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டது.

Source link