உலகின் எந்த சக்தியாலும் இந்தியாவை சீண்ட கூட முடியாது; ராஜ்நாத் சிங்

லடாக்: உலகின் எந்த சக்தியாலும் இந்தியாவை சீண்ட கூட முடியாது என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

27வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, லடாக்கில் கார்கில் போர் நினைவிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘சௌர்யா சந்தியா’ நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது, 1999ம் ஆண்டு நடந்த கார்கில் போரின் போது, உயிரைத் தியாகம் செய்த வீரர்களுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார். மேலும், போரில் வீரமரணம் அடைந்த தியாகிகளின் குடும்பத்தினருக்கு நினைவு பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

தொடர்ந்து, ராணுவ வீரர்கள் மத்தியில் அவர் பேசியதாவது; ராணுவ வீரர்களிடம் இருக்கும் மன வலிமை தான் எந்தவொரு சூழலிலும் முன்னோக்கிச் செல்லத் தூண்டுகிறது. இந்த ஆற்றல் நமது வீரர்களிடம் இருக்கும் வரை, உலகின் எந்த சக்தியும் இந்தியா மீது சீண்ட முடியாது என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. உங்களின் தைரியம் மற்றும் உறுதியான மனப்பான்மையின் காரணமாகவே, நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எந்தவித பயமுமின்றி தங்களது கனவுகளை நிறைவேற்ற முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Source link