நியூயார்க்: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் துணை செயலாளர் பர்கா தம்ரக்கர் ஐநா சபையின் பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அவர் பேசியதாவது: ஆதாரமற்ற, சரிபார்க்கப்படாத குற்றச்சாட்டுகள், பொய்யான புள்ளிவிவரங்களை கொண்டு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை எதிர்மறையாக சித்தரிக்க முயல்வதை நாங்கள் கடுமையாக எதிர்கிறோம்.
மனித உரிமைகள் மற்றும் கருத்து சுதந்திரத்தை பயன்படுத்தி நாடுகளுக்கு எதிராக அரசியல் அழுத்தம் கொடுப்பதற்கு பயன்படுத்த கூடாது. ஆட்கொணர்வு மனு, தேசிய, மாநில மனித உரிமைகள் ஆணையம் ஆகியவை மனித உரிமை மீறல்களுக்கு எதிராக தீர்வு காணும் வழிமுறைகளை இந்தியாவில் வழங்குகின்றன.
முறையான ஆவணங்களுடன் கூடிய குறிப்பிட்ட புகார்கள் ஏதேனும் இருந்தால், அதை தெளிவுபடுத்த இந்தியா எப்போதும் தயாராக உள்ளது. சர்வதேச மனித உரிமை அமைப்புகளுடன் இந்தியா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும். இவ்வாறு பர்கா தம்ரக்கர் பேசினார்.
