வாஷிங்டன்: உலகளவில் எரிசக்தி மற்றும் ராணுவத்தில் அதிக சக்தி கொண்ட நாடாக அமெரிக்கா மாற்றப்பட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அதிபர் டிரம்ப் பேசியதாவது; 2 ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவை காப்பாற்றுவதற்கான பொறுப்பை மக்கள் எங்களிடம் கொடுத்தார். அதன்படி, கடந்த 19 மாதங்களில் நான் அளித்த ஒவ்வொரு வாக்குறுதியையும் நிறைவேற்றியுள்ளேன். முன்னாள் அதிபர் ஜோ பைடன் மற்றும் தீவிர இடதுசாரி ஜனநாயகக் கட்சியினர் அமெரிக்க வரலாற்றிலேயே மிக மோசமான பணவீக்கத்தை உருவாக்கினர். அதுமட்டுமில்லாமல், நாட்டின் நகரங்களை வறுமை மற்றும் அழிவின் விளிம்பிற்கு கொண்டு சென்றனர்.
அமெரிக்காவை இருண்ட காலத்தில் இருந்து, கோல்டன் நாட்களுக்கு கொண்டு வந்துள்ளோம். அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவில் வரிக் குறைப்புகளும், விதிமுறைகள் தளர்வுகளும் வழங்கினோம். அதேபோல, ராணுவத்திற்கான முதலீடுகள் அதிகரிக்கப்பட்டன. இதன்மூலம், எரிசக்தி மற்றும் ராணுவத்தில் உலகளவில், அமெரிக்கா அதிக சக்தி கொண்ட நாடாக உருமாறியுள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.
