நியூஜெர்சி: உலக கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த, அர்ஜென்டினா – ஸ்பெயின் அணிகளுக்கு இடையேயான பைனல், துவங்கி நடந்து வருகிறது. இதில் முதல் கோல் யார் அடித்து முன்னிலை பெறுவர் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
உலக கோப்பை கால்பந்து திருவிழா ‘கிளைமேக்சை’ எட்டியுள்ளது. அமெரிக்கா, மெக்சிகோ, கனடா என மூன்று நாடுகளில் 23வது உலக கோப்பை தொடர் நடக்கிறது. 48 அணிகள் பங்கேற்றன. பிரேசில், பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற முன்னணி அணிகள் வெளியேறின. பைனலுக்கு உலகின் ‘நம்பர்-1’ அணியான அர்ஜென்டினா, ‘நம்பர்-2’ அணியான ஸ்பெயின் தகுதி பெற்றன. அமெரிக்காவின் நியூஜெர்சி மைதானத்தில் நடக்கும் பைனலை காண உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருந்தனர்.
30 நிமிடம்:
ஆட்டம் துவங்கியது முதலே போட்டியில் அனல் பறந்தது. யார் முதல் கோல் அடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்புக்கு இடையே, இரு அணி வீரர்களும், தொடர்ந்து எதிரணி கோல் போஸ்ட்டை முற்றுகையிட்டு வருகின்றனர். இருப்பினும் இரு அணி கோல் கீப்பர்களும், பின்கள வீரர்களும் சிறப்பாக செயல்பட, இரு அணிகளுக்கும் இதுவரை கோல் கிடைக்கவில்லை. தொடர்ந்து போட்டி நடந்து வருகிறது.
