ஆக்லண்ட்: எம்.எல்.சி., தொடரில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் ஆனது.
அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் (எம்.எல்.சி.,) தொடர் நடந்தது. ஆக்லண்டில் நடந்த பைனலில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ், வாஷிங்டன் பிரீடம் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற வாஷிங்டன் அணி, பீல்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய லாஸ் ஏஞ்சல்ஸ் அணிக்கு முன்ரோ (40), பிளட்சர் (47) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. டிராம்ப் 39 ரன் எடுத்தார். சுனில் நரைன் (0), ரசல் (0), கேப்டன் ஹோல்டர் (8) என வரிசையாக ஏமாற்றினர். லாஸ் ஏஞ்சல்ஸ் அணி 19.4 ஓவரில் 164 ரன்னில் ஆல் அவுட்டானது. அடுத்து களமிறங்கிய வாஷிங்டன் அணிக்கு கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் (8), ஓவன் (9) ஜோடி ஏமாற்றம் தந்தது. ரச்சின் (7) கைவிட, ஆன்ட்ரிஸ் கவுஸ் (40), நிகில் சவுத்ரி (25) ஜோடி ஆறுதல் தந்தது.
கடைசி ஓவரில் வாஷிங்டன் வெற்றிக்கு 14 ரன் தேவைப்பட்டன. ஷாத்லே பந்து வீசினார். முதல் பந்தில் சிக்சர் அடித்த பையனார் (53), ஹாலண்ட் (0), 2, 3 வது பந்தில் அவுட்டாகினர். கடைசி பந்தில் லகிரு (4) ரன் அவுட்டாக, வாஷிங்டன் அணி 20 ஓவரில் 163/9 ரன் மட்டும் எடுத்தது.
1 ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்ற லாஸ் ஏஞ்சல்ஸ் அணி, இத்தொடரில் முதன் முறையாக சாம்பியன் ஆனது.
