லக்னோ: உத்தரபிரதேசத்தில் சரக்கு வாகனம் விபத்துக்குள்ளானதில் 12 பேர் பலியாகினர்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
ராஜஸ்தானில் இருந்து 32 பேருடன் சரக்கு வாகனம் ஒன்று உத்தரபிரதேசத்தின் புதான் நோக்கி வந்து கொண்டிருந்தது. கெக்ரா போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் வாகனம் வந்த போது, எதிர்பாராத விதமாக சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் வாகனத்தில் பயணித்தவர்களில் 12 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மற்றவர்கள் படுகாயம் அடைந்தனர். விபத்தை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
படுகாயம் அடைந்தவர்களை காப்பாற்றி, அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ பகுதிக்குச் சென்ற போலீசார், போக்குவரத்து ஒழுங்குபடுத்தி, விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் பின்னால் வந்த மற்றொரு வாகனம், முன்னால் சென்ற சரக்கு வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது தெரிய வந்தது.
இந்த விபத்து செப்.7ம் தேதி நள்ளிரவு 12.30 மணியளவில் நிகழ்ந்தது. நள்ளிரவு நேரம், அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது. வாகனம் ஓட்டுபவர், தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்தில் சிக்கும் வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
