எனக்கு அம்மாவே வேண்டாம்; தலை மூழ்க தயாரான ரேவதி: பிடிவாதத்தை தளர்த்துவாரா சாமுண்டீஸ்வரி?

அரசி கொடுத்த டாஸ்க்… தனியாளாக ஜெயித்து காட்டுவாளா சாமந்தி? – சாமந்தி இன்றைய எபிசோட் அப்டேட்

சாமந்தி சீரியலின் நேற்றைய எபிசோடில் ரோஜாவின் திட்டம் குறித்து சாமந்தி உண்மையை அறிந்த நிலையில், இன்று ரோஜாவை சந்தித்துவிட்டு வீட்டிற்கு திரும்பும் சாமந்தியை அரசி வழிமறித்து, “எங்கே போயிட்டு வர?” என்று கேள்வி கேட்கிறாள். அந்த நேரத்தில் அரசியின் அண்ணி, “இவளை இப்பவே வீட்டை விட்டு வெளியே அனுப்புங்க” என்று தூண்டிவிடுகிறாள்.

ஆனால் பாட்டி அதற்கு பதிலடியாக, “சாமந்தி வீட்டை விட்டு போகலாம். ஆனால் அவள் செய்து வரும் எல்லா வேலைகளையும் நீ தான் செய்யணும். அதற்கு தயாரா?” என்று கேட்கிறார். இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அரசியின் அண்ணி அமைதியாகி விடுகிறாள். இதற்கிடையில், மருது வேறொருவரின் செல்போனில் இருந்து சாமந்திக்கு தொடர்புகொண்டு நடந்த அனைத்து விஷயங்களையும் கூறுகிறான். இதைக் கேட்ட சாமந்தி பெரும் அதிர்ச்சியடைகிறாள்.

அதன் பிறகு அரசி, சாமந்தியை அழைத்து கிருஷ்ண ஜெயந்தி பற்றிய அவளது அறிவை சோதிக்கிறாள். “கிருஷ்ண ஜெயந்திக்கு என்னென்ன செய்ய வேண்டும்?” என்று கேட்க, சாமந்தி ஒவ்வொரு சடங்கையும் அதன் முக்கியத்துவத்துடன் தெளிவாக விளக்குகிறாள். சாமந்தியின் பதில்களால் அனைவரும் அசந்து போனாலும், அவளுக்கு கடினமான பொறுப்பை அரசி அளிக்கிறாள். கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்திற்கு அனைத்து ஏற்பாடுகளையும் தனியாகவே சாமந்தி செய்ய வேண்டும், மேலும் அவளுக்கு யாரும் உதவக்கூடாது என்று உத்தரவிடுகிறாள்.

இந்நிலையில், ஒரே ஆளாக சாமந்தி இந்தப் பெரிய பொறுப்பை எப்படி சமாளிக்கப் போகிறாள்? அரசி கொடுத்த டாஸ்க்கில் வெற்றி பெறுவாளா? அடுத்ததாக என்ன நடக்கிறது என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்: கையெழுத்து போட தயாரான ரேவதி.. கார்த்திக் செய்யப் போவது என்ன?

கார்த்திகை தீபம், திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இன்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரியை சந்தித்த ரேவதி, அவர் விரும்பியபடியே கையெழுத்து போட்டு தர சம்மதம் தெரிவிக்கிறார். இந்த விஷயம் தெரிய வந்ததும் ராஜராஜன் கடும் கோபமடைகிறார். “சாமுண்டீஸ்வரி இப்படி செய்தால் ரேவதி வேறு என்ன முடிவு எடுப்பார்?” என்று வருத்தப்படுகிறார். 

அதே நேரத்தில், குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து எப்படியாவது ரேவதியை தடுக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். மறுபக்கம், சந்திரகலா சிவனாண்டியை சந்தித்து, ரேவதி கையெழுத்து போட ஒப்புக்கொண்ட செய்தியை உற்சாகமாக தெரிவிக்கிறார். இதைக் கேட்ட சிவனாண்டி மிகவும் மகிழ்ச்சியடைந்து, “நம்ம திட்டம் ஒவ்வொன்றாக நிறைவேற ஆரம்பிச்சிருக்கு. இனிமேல் எல்லாமே நம்ம பக்கம் தான்!” என்று நம்பிக்கையுடன் பேசுகிறார்.
அடுத்த நாள், சாமுண்டீஸ்வரியை சந்திக்க ரேவதி கிளம்பத் தயாராகிறார்.

வீட்டில் பாட்டி மட்டும் இருப்பதால் என்ன சொல்லி வெளியே போவது என்று குழப்பமடைகிறார். முதலில் பொய் சொல்லிவிட்டு கிளம்பலாம் என நினைக்கிறார். ஆனால் அவரால் பொய் சொல்ல முடியாமல் தவிக்கிறார். இறுதியில், உண்மையை பாட்டியிடம் சொல்லிவிடுகிறார். இதைக் கேட்ட பாட்டி, ரேவதியை வெளியே செல்லவிடாமல் தடுக்க முயற்சி செய்கிறார். ஆனாலும் ரேவதி தனது முடிவில் உறுதியாக இருந்து அங்கிருந்து கிளம்பி சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு செல்கிறார்.

அங்கு சாமுண்டீஸ்வரி தேவையான ஆவணங்களுடன் ரேவதிக்காக காத்திருக்கிறார். ரேவதி உண்மையிலேயே கையெழுத்து போடுவாரா? இதை தடுக்க கார்த்திக் எந்த முடிவை எடுக்கப் போகிறார்? என்ற பரபரப்பான திருப்பங்களுடன் இன்றைய எபிசோட் நகரவுள்ளது இதனால் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அப்பத்தாவுக்கு எதிராக ஒன்று கூடும் அம்மாக்கள், நடக்கப் போவது என்ன? – வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட் 

வாகை சூடவா சீரியலின் நேற்றைய எபிசோடில் ஜீவா மீனாட்சி நெருக்கத்தை பார்த்து ஆதி கடுப்பான நிலையில் இன்று, மனோ தேன்மொழியை நினைத்து வருத்தத்தில் இருக்கிறான். மேலும் தேன்மொழிக்கு எப்படி ஒரு நல்ல புருஷன் ஆக இருக்க வேண்டும் என நினைத்து பார்த்து வருந்துகிறான்.

மறுபக்கம் தேன்மொழியும் வருத்தமாக இருக்க மீனாட்சி அதை பார்த்துவிட்டு கண்டும் காணாமல் செல்ல தேன்மொழி எதுவுமே கேட்காம போற என்று கேட்க இது புருஷன் நெனச்சு வருத்தமா இருப்ப.. அதை எதுக்கு நான் கேட்கணும் உன்னை பிரிச்சு கூட்டிட்டு வந்தது நான் தானே என்று சொல்கிறாள். பிறகு மனோ தேன்மொழிக்கு போன் செய்ய மீனாட்சி போனை பிடுங்கி ஏதாச்சும் பேசுனா.. அவ்வளவு தான் என போன் வாங்கி மனோவிடம் கோபப்பட்டு பேசிவிட்டு வைத்து விடுகிறாள். 

அதன் பிறகு சக்தி மனோ வருத்தமாக இருப்பதை பார்த்து சுமதிக்கு போன் செய்து அப்பத்தாவுக்கு தெரியாம மனோவை நான் கோவிலுக்கு கூட்டிட்டு வரேன். நீங்கள் என் மீனாட்சிக்கு தெரியாமல் தேன்மொழியை கோவிலுக்கு கூட்டிட்டு வாங்க.. ரெண்டு பேரும் சந்திச்சு பேசி ஒரு முடிவு எடுக்கட்டும் என்று சொல்கிறாள். அங்கே சக்தி அப்பத்தாவுக்கு தெரியாமல் மனோவை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு கிளம்ப இங்கே சுமதி மீனாட்சியிடம் பொய் சொல்லி தடுமாறுகிறார்,  

ஜீவா மீனாட்சி அழைத்துக் கொண்டு வெளியே சென்றுவிட சுமதி தேன்மொழி அழைத்துக்கொண்டு கோவிலுக்கு கிளம்புகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிாபார்ப்பு எழுந்துள்ளது.

Source link