“எனது அடுத்த தமிழ் படம்…” – ரிலீஸ் அப்டேட்டை அறிவித்த ஃபகத் ஃபாசில்

96, மெய்யழகன் படத்தை தொடர்ந்து இயக்குநர் பிரேம் குமார் விக்ரமை நாயகனாக வைத்து வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஒரு படம் இயக்க கமிட்டானார். ஆனால் அப்படத்தில் இருந்து விக்ரம் சில காரணங்களால் வெளியேறினார். இதனைத் தொடர்ந்து விக்ரமிற்கு பதில் ஃபகத் ஃபாசில் உள்ளே வந்தார். ஆனால் அதே கதையா என்பது உறுதியாகவில்லை. 

இதனிடையே கடந்த மே மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தில் ஃபகத் ஃபாசிலைத் தவிர்த்து ஷிவதா, ஹரிஷ் உத்தமன், தேவதர்ஷினி சேத்தன் மற்றும் கருணாகரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பிரேம் குமாரின் முந்தைய படங்களுக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படம் வேல்ஸ் நிறுவனத்தின் 32வது படமாக உருவாகி வருகிறது. 

இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் அப்டேட்டை ஃபகத் ஃபாசில் தெரிவித்துள்ளார். இப்படம் இந்தாண்டு டிசம்பரில் வெளியாகும் எனத் தெரிவித்தார். இதனை அவர் தயாரிப்பில் தமிழில் நாளை வெளியாகவுள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ பட செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். சென்னையில் நடந்த இந்த விழாவில் பேசிய அவர்,  “இயக்குர் பிரேம் இயக்கத்தில் நான் நடித்துள்ள எனது அடுத்த தமிழ்ப்படம் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது. அப்போது உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பேன் என்று நம்புகிறேன்” என்றார். 

Source link