கெனிஷா மகிழ்ச்சி: யோகி பாபு நடிக்கும் An Ordinary Man படத்தை ரவி மோகன் இயக்கி வருகிறார். தான் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் படத்திற்கு யோகி பாபுவை ஹீரோவாக ஒப்பந்தம் செய்தது போன்று, தன் கம்பானியன் கெனிஷா பிரான்சிஸை இசையமைப்பாளராக்குகிறாராம் என தகவல் வெளியானது.
இதையடுத்து An Ordinary Man படத்தின் இசையமைப்பாளர் கெனிஷா பிரான்சிஸ் என அதிகாரப்பூர்வ அறிவிப்பே வெளியானது. அதை பார்த்து கெனிஷாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள். அந்த வாழ்த்துக்களை எல்லாம் இன்ஸ்டா ஸ்டோரிகளாக வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார். இத்தனை ஆண்டுகளாக பாடகியாக இருந்த தான் இசையமைப்பாளர் அவதாரம் எடுத்திருப்பது குறித்து சந்தோஷத்தில் இருக்கிறார் அவர்.
கெனிஷா ஸ்டோரி யாருக்கு?: கனவுகள் நிஜமாகும். நாம் நம்பும் ஆட்களுடன் சேர்ந்து ஒரு இயக்குநராக என் பயணம் தொடர்கிறது என்று ரவி மோகனும் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ஸ்டோரி போட்டிருக்கிறார். இதற்கிடையே யார் பெயரையும் குறிப்பிடாமல் கெனிஷா போட்ட ஸ்டோரி பற்றி சினிமா ரசிகர்கள் பேசுகிறார்கள். அவர் யாரை மனதில் வைத்து இப்படி பேசியிருக்கிறார் என்பது புரிகிறது என்கிறார்கள்.
அந்த ஸ்டோரியில் கெனிஷா கூறியிருப்பதாவது, என்னை அவமதித்தவர்களில் ஒருவர் கூட நல்ல படியாக வாழ்ந்தது இல்லை என்று இருந்தது. ரவி மோகனின் மனைவி ஆர்த்திக்காக தான் இந்த ஸ்டோரி போன்று என்கிறார்கள் சமூக வலைதளவாசிகள்.
முன்னதாக யாராவது ஹீல் பண்றேன்னு வந்தால் ஹை ஹீல்ஸால் சாத்தி அனுப்புமாறு இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்திருந்தார் ஆர்த்தி.அது கெனிஷாவுக்காக தான் என ரசிகர்கள் நம்பினார்கள். இந்நிலையில் ஹீல் ஸ்டோரிக்கு லேட்டாக ரியாக்ட் செய்திருக்கிறார் கெனிஷா என பேசப்படுகிறது.
தம்மடிக்கும் வீடியோ: இந்நிலையில் ரவி மோகனும், கெனிஷாவும் ஒன்றாக அமர்ந்து புகைப்படிக்கும் வீடியோ வைரலாகிவிட்டது. அதை பார்த்த சினிமா ரசிகர்கள் கூறியிருப்பதாவது, பிரிவை அறிவித்தபோது உங்கள் மீது ரொம்ப மரியாதை வைத்திருந்தோம் ரவி மோகன். ஆர்த்தியை திட்டினோம். ஆனால் இப்படி நீங்களும், கெனிஷாவும் சேர்ந்து புகைப்பிடிப்பதை பார்த்த பிறகு உங்கள் மீதான மரியாதை போய்விட்டது. பழமொழி சரியாகத் தான் இருக்கிறது. சாரி ரவிணா, இனி உங்களுக்கு எங்களின் ஆதரவு இல்லை என்கிறார்கள்.
அதை பார்த்த ரசிகர்கள் சிலரோ, ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து புகைப்பிடித்தால் தவறா?. புகைப்பிடிக்கும் அனைவரும் கெட்டவர்கள் இல்லை. எங்களுக்கு தெரிந்த எத்தனையோ நல்ல ஆட்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளது என தெரிவித்துள்ளனர்.
தற்போது ரவி மோகனின் படத்தை விட அவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தான் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படுகிறது. சினிமாவுக்கு வந்துவிட்டால் விமர்சனங்கள் வரத் தான் செய்யும் என்பது அவருக்கு தெரியும். அதனால் விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் தன் பட வேலையில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
ரவி குடும்பத்தார்: An Ordinary Man படத்தை இயக்குவதோடு, தயாரிக்கவும் செய்வது ரவி மோகன் தான். தான் இதுவரை இயக்கிய காட்சிகளை பெற்றோருக்கும், மோகன் ராஜா அண்ணனுக்கும் காண்பித்திருக்கிறார். அந்த காட்சிகளை பார்த்த அவர்களோ அருமை என பாராட்டியிருக்கிறார்கள். எனக்கு முக்கியமானவர்கள் பாராட்டிவிட்டார்கள் என்று டான்ஸ் ஆடி ஒரு வீடியோ கூட வெளியிட்டிருந்தார் இயக்குநர் ரவி மோகன்என்பது குறிப்பிடத்தக்கது.
Source link
