புதன் பகவான் இன்று செப்டம்பர் 7ஆம் தேதி தனது சொந்த ராசியான கன்னி ராசியில் பெயர்ச்சியாகி உள்ளார். செப்டம்பர் 17ஆம் தேதி நவகிரகங்களின் தலைவனான சூரியனும் கன்னி ராசியில் நுழைய உள்ளார். அங்கு புதனுடன் இணைவதால் புத ஆதித்ய யோகம் உருவாகிறது. புதனின் உச்ச வீடான கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் புரட்டாசி மாத காலத்தில், உருவாகக்கூடிய இந்த யோகம் பல ராசிகளுக்கு சிறப்பான பலன்களை தரக்கூடியதாக இருக்கும்.
செப்டம்பர் 17ஆம் தேதி சூரிய பகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாக கூடிய புரட்டாசி மாதம் தொடங்க உள்ளது. ஏற்கனவே கன்னி ராசி ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்து வரக்கூடிய புதன் பகவானுடன் சூரியன் சேர்ந்து புதாதித்ய யோகத்தை உருவாக்க உள்ளார். இந்த மங்களகரமான கிரக சேர்க்கை மற்றும் யோகம் காரணமாக கன்னி, சிம்மம், விருச்சிகம், கும்பம் உள்ளிட்ட ராசிகளுக்கு நிதிநிலை ரீதியாக செழிப்பை தரக்கூடும். எந்தெந்த விஷயங்களில் நன்மை கிடைக்கும் யாருக்கு கிடைக்கும் என்று தெரிந்து கொள்வோம்.
புதாதித்ய ராஜயோகம் என்றால் என்ன?
வேத ஜோதிடத்தில் சூரிய பகவான் தலைமைத்துவம், தன்னம்பிக்கை, கௌரவம், நிர்வாக திறனை தரக்கூடியவர். அதேசமயம் புதன் பகவான் ஒருவருக்கு அறிவு, பேச்சுத்திறன், வாதிடும் திறன், கணக்கீடு, வணிகம் தொடர்பான விஷயங்களில் புலமையை தரக்கூடியவர். இந்த இரண்டு கிரகங்களும் சேரும்போது உருவாகும் புத ஆதித்ய யோகம் பல்வேறு சிறப்பான அற்புத பலன்களை தரக்கூடியதாக இருக்கும்
இந்த யோகம் அமையப்பெற்ற ஜாதகம் ஜாதகம் முடிவெடுப்பதில் வல்லவராகவும், அவருடைய செயல் திறன் சிறப்பாக இருக்கும். அவருடைய பேச்சு மற்றும் செயல்பாடுகள் மூலம் அனைத்து விதமான பணிகளையும் சிறப்பாக செய்து முடிப்பார். இனி புரட்டாசி மாதத்தில் நன்மைகளை பெற உள்ளார் என்பதை தெரிந்து கொள்வோம்.
சிம்ம ராசி
சிம்ம ராசி அன்பர்களுக்கு இந்த புரட்டாசி மாதத்தில் ஏற்படக்கூடிய புத ஆதித்ய யோகம் காரணமாக நீங்கள் எதிர்பார்த்த இடப்பெயர்ச்சி கிடைக்கலாம். இது உங்களுடைய தன்னம்பிக்கையையும், செல்வாக்கையும் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்க வாய்ப்புகள் உண்டு.
பணியிடத்தில் புதிய பொறுப்புகளையும், பதவி உயர்வு தொடர்பான நல்ல செய்திகளையும் பெறுவார்கள். நீங்கள் செய்யும் தொழில் புதிய முயற்சிகள், உத்திகளை பயன்படுத்துவது நன்மை தரும். நிதி நிலையை வலுப்படுத்த ஏற்றமான காலமாக இருக்கும்.
கன்னி ராசி
கன்னி ராசியை சேர்ந்த நண்பர்களுக்கு இந்த மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். உங்களுடைய வேலை மற்றும் தொழில் தொடர்பாக முக்கிய வேலைகளை செய்து முடிப்பீர்கள். உங்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். நீண்ட காலமாக தடைபட்டு வந்த பணிகள் அல்லது திட்டங்களை செயல்படுத்த அதில் வெற்றி கிடைக்கும். நீங்கள் செய்யக்கூடிய தொழில் தொடர்பாக புதிய நபர்களின் தொடர்புகள், சிறந்த வாய்ப்புகளை கிடைக்க உதவும். இதன் மூலம் நிதிநிலை ரீதியாக லாபத்தையும் பெறுவார்கள். புதிய வருமான வழிகளை கண்டறிவதில் வெற்றி பெறுபவர்கள். இந்த மாதத்தில் முறையான திட்டமிடலுடன் செயல்படுவதால் உங்களுடைய செயல்கள் வெற்றி, சேமிப்பு அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு.
விருச்சிக ராசி
விருச்சிக ராசியை சேர்ந்த நண்பர்களுக்கு இந்த புதாதித்ய யோகம் நீங்கள் செய்யக்கூடிய வேலை, தொழில், வணிகம் தொடர்பாக முன்னேற்றத்தை தரக்கூடியதாக இருக்கும். பணியிடத்தில் உங்களுக்கு முழு ஆதரவு கிடைக்கும். மேலும் நீங்கள் எடுத்துக் கொண்ட பணிகளை சிறப்பாக நிறைவேற்ற முடியும். உங்களுடைய கடின உழைப்பு மற்றும் நேர்மை நல்ல பலனை தரக்கூடியதாக இருக்கும்.
நிதி சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படலாம். நீங்களும் செய்த முதலீடுகள் லாபம் தரக்கூடியதாகவும், நிலுவையில் உள்ள பணம் திரும்ப கிடைப்பது போன்ற வருமானத்தை அதிகரிக்க கூடியதாக இருக்கும். இந்த காலத்தில் முக்கிய நிதி முடிவுகளை கவனமாக எடுப்பது நன்மை தரும்.
தனுசு ராசி
இந்தக் காலம் தனுசு ராசியில் உருவாக்கக்கூடிய புதாதித்ய யோகம் மிகவும் முக்கியமானதாக அமையலாம். உங்கள் வேலை அல்லது வணிகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம், மேலும் உங்கள் செயல்திறன் பாராட்டப்படலாம். நீண்ட நாட்களாகத் தேங்கிக் கிடந்த,தடைபட்டு வந்த திட்டங்கள் வேகம் பெறலாம். தொழில் செய்பவர்களுக்குப் புதிய தொடர்புகளும் சிறந்த வாய்ப்புகளும் கிடைக்கலாம்.
நிதி ரீதியாக இக்காலம் சாதகமாக அமையலாம். புதிய வருமான வழிகளைக் கண்டறிவதில் வெற்றி கிடைக்கலாம்; முறையான திட்டமிடல் மூலம் உங்கள் சேமிப்பை அதிகரிக்கும் வாய்ப்பும் உங்களுக்குக் கிடைக்கலாம்.
