​என்.டி.ஆர் முதல் விஜய் வரை: நடிகர்கள் அரசியல் எண்ட்ரி.. முதல் தேர்தல் தாக்கம் எப்படி இருந்தது?​ – from ntr to vijay the impact and vote share of film stars in their first elections

தென்னிந்திய அரசியலுக்கும் சினிமா துறைக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. நாடகம் தொடங்கி செல்லுலாய்டு வரை மக்கள் கதைகளின் ஊடாக அரசியல் படுத்தப்பட்ட வரலாற்றை நாம் பார்த்திருக்கிறோம். அதோடு திரையில் தெரியும் நடச்சத்திரங்களை ஆட்சியாளர்களாக மாற்றிய வரலாறும் தென்னகத்துக்கு குறிப்பாக தமிழ் மற்றும் ஆந்திர மக்களுக்கு உண்டு

இந்த வகையில் சமகால அரசியல் கூட விஜய் ஒரு முக்கிய உதாரணமாக திகழ்கிறார். என் டி ஏ ராமாராவ் தொடங்கி விஜய் வரையிலான திரை நட்சத்திரங்களின் அரசியல் பயணம் மற்றும் அவர்களின் தாக்கம் நெடியது. அதிலும் அவர்களின் முதல் தேர்தல் வாக்கு சதவீதம் ஒரு அதி முக்கியமான அரசியல் மாற்றம் ஆகும்.

​இமாலய வெற்றி பெற்ற என்.டி.ஆர்

தெலுங்கு சினிமாவின் புகழ்பெற்ற ஜாம்பவான் என்.டி ராமா ராவ் 1982 ஆம் ஆண்டு தனது அறுபதாவது வயதில் தெலுங்கு தேசம் கட்சியை தோற்றுவித்தார். 1983 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை முடிவுக்கு கொண்டு வந்து 46.30 சதவீத வாக்குகளுடன் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார். இது ஒரு இமாலய வெற்றியாக கருதப்பட்டது.

30.37% வாக்குகளை பெற்ற எம்.ஜி.ஆர்

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான ஆளுமையாக கருதப்பட்ட எம்.ஜி.ஆர் திமுகவிலிருந்து பிரிந்து வந்து 1972 -ல் தனது சொந்த கட்சியான அதிமுகவை தொடங்கினார் .1977 -ஆம் ஆண்டில் முதலமைச்சராக மாறிய அவர் 30.37 சதவீதம் வாக்குகளோடு தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.

25% வாக்குகளை பெறுவாரா விஜய்

2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றி கழகம் எனும் கட்சியை தொடங்கிய விஜய் 2026 -ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்பட்டிருக்கிறார். தற்போது வரை வெளியாகும் கருத்து கணிப்புகள் அவர் 25 சதவீத வாக்குகளை பெறுவார் என சொல்கின்றன. ஒருவேளை விஜய் 25 லிருந்து 30% வாக்குகளை பெற்றால் அவர் தமிழக அரசியலில் ஒரு கிங் மேக்கராக மாற வாய்ப்பு உண்டு.

கேப்டன் விஜயகாந்த் முதல் தேர்தல்

தமிழக மக்களால் கேப்டன் என அன்போடு அழைக்கப்பட்ட கேப்டன் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு நடிகராக வலம் வந்தார் 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கிய அவர் தனது முதல் தேர்தலில் 8.38 சதவீத வாக்குகளை பெற்று ஒரு சட்டமன்ற தொகுதியில் வென்றார்.

தாக்கத்தை ஏற்படுத்திய சிரஞ்சீவி

தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி ஊழலுக்கு எதிரான ஆட்சியை கொண்டு வருவோம் எனக் கூறி பிரஜா ராஜ்யம் என்று தனது கட்சியை 2008 ஆண்டு தொடங்கினார். ஏகோபித்த மக்கள் ஆதரவை பெற்ற சிரஞ்சீவி முதல் தேர்தலில் 16 சதவீத வாக்குகளை பெற்றார்.

​5% வாக்குகளை பெற்ற பவன்

தெலுங்கு திரை உலகின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் தனது சகோதரர் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் கட்சியில் பணியாற்றி தன்னை தயார்படுத்திக் கொண்ட பிறகு 2014 ஆம் ஆண்டு ஜனசேனா என்ற கட்சியை தொடங்கினார். அவர் தன்னுடைய முதல் தேர்தலில் 5.53 சதவீத

Source link