மனிதனால் ஏற்படும் பருவநிலை மாற்றங்களுடன் இந்த எல் நினோவும் இணைந்திருப்பதால், உலகம் தற்போது தீவிர வானிலையின் அபாயகரமான பகுதிக்குள் (danger zone of extreme weather) நுழைந்துள்ளதாக ஐநா சபை எச்சரித்துள்ளது.
இதனால், உலகளவில் இயல்பான மழைப்பொழிவு முறையில், மிகப்பெரிய சீர்குலைவு ஏற்படுகிறது. வறட்சி, மழைப்பொழிவு ஆகிய இரண்டும் ஒருசேர அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
உருவாகியுள்ள எல்.நினோ, தென்கிழக்கு ஆசியா (இந்தியா உட்பட), ஆஸ்திரேலியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் வறட்சியும், வெப்ப அலைகளும், தென் அமெரிக்காவின் பசிபிக் கடலோரப் பகுதிகள் (பெரு, சிலி, ஈக்வடார்), கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவின் தெற்குப் பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாகத் தீவிரமழை, பேரழிவையும் ஏற்படுத்துகிறது.
பசிபிக் பெருங்கடலில் நிலவும் எல் நினோ (El Niño) காரணி, 2°C-க்கும் அதிகமான வெப்ப உயர்வை எட்டி ‘சூப்பர் எல் நினோ’ (Super El Niño) ஆக மாறியுள்ளதால், கடலின் வெப்பம் அதிகமாக உயர்ந்து, ஒரே நேரத்தில் லோவெல் (Lowell), கரீனா (Karina) மற்றும் மாரி (Marie) ஆகிய 3 சூறாவளிகள் உருவாகியுள்ளன.
