‘எவரையும் விட்டு வைக்க மாட்டோம்’… நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மோடி உறுதி

நீட் தேர்வு முறைகேடுகள், வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அங்கு அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது போலீசார் தடியடி நடத்தவே, தற்போது நாடு முழுவதும் மாணவர்களும், இளைஞர்களும் போராட்டக் களத்தில் இறங்கி இருக்கிறார்கள். நாட்டின் பிரதான நகரங்களில் போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. 

விரைவு நீதிமன்றங்கள் 
 
இந்த விவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதையடுத்து ‘நீட்’ விவகாரம் குறித்து விவாதிக்க தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. இந்த நிலையில், பிரதமர் மோடி முதல் முறையாக இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “நமது இளைஞர்களின் நலனையும், அவர்களின் எதிர்காலத்தையும் விட முக்கியமானது வேறு எதுவும் இல்லை. வினாத்தாள் கசிவு சம்பவங்களில் தொடர்புடையவர்களுக்கு விரைவாகவும் கடுமையாகவும் தண்டனை வழங்கும் வகையில், விரைவு நீதிமன்றங்களை அமைக்க முடிவு செய்துள்ளோம்.

யாராக இருந்தாலும் ஒருபோதும் தப்பிக்க முடியாது

இதற்கான அனைத்து அவசியமான நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளேன். மாணவர்களின் நலனையும் அவர்களின் எதிர்காலத்தையும் பாதுகாக்க அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நமது இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக்க முயற்சிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் ஒருபோதும் தப்பிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்

Source link