“ஜனநாயகன்” ரிலீஸ் : தேம்பி தேம்பி அழுத அமைச்சர் பர்வேஷ்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தமிழ்நாட்டின் முதல்வருமான விஜய் நடித்த கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ பல்வேறு பிரச்சனைகளைத் தாண்டி ஒரு வழியாக இன்று (23.07.2026) உலகமெங்கும் வெளியாகியுள்ளது. முதல்வராக முதல் படம், சினிமாவில் கடைசி படம் என்ற சூழ்நிலையில் வெளியாகியுள்ளதால் விஜய்யின் ரசிகர்களும் தவெக தொண்டர்களும் படத்தைத் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். 

வழக்கம் போல் திரையரங்கில் பேனர், பட்டாசு, டிஜே கச்சேரி என நேற்று (22.07.2026) இரவு முதலே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே முதல்வர் விஜய் நேற்று இரவு சென்னை அடையாறு தாகூர் திரைப்பட கல்லூரியில் படம் பார்த்து மகிழ்ந்தார். இந்நிலையில் தமிழகத்தில் ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் காட்சி இன்று காலை 09.00 மணியளவில் பெரும்பாலான திரையரங்குகளில் தொடங்கியது.

இதனையொட்டி விஜய்யின் ரசிகர்கள் இந்தத் திரைப்படத்தின் வெளியீட்டைக் கோலாகலமாகக் கொண்டாடி வரும் வேளையில், தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர் முகமது பர்வேஷும் இத்திரைப்படத்தை புதுக்கோட்டையில் உள்ள தியேட்டரில் கண்டுகளித்தார். அச்சமயத்தில் ஜனநாயகன் திரைப்படத்தின் காட்சிகளைக் கண்ட அமைச்சர் முகமது பர்வேஷ், தேம்பி தேம்பி அழுது ஆனந்தக் கண்ணீர் விட்டார். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது. 

Source link