ஏஐ கட்டுப்பாட்டிற்குள் வரும் மனித இனம்; எச்சரிக்கை விடுத்த அறிவியல் வல்லுநர்

செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் உருவாக்கி வரும் ’சூப்பர் இண்டெலிஜென்ஸ்’ வருகின்ற 2030 க்குள் மனிதக் குலத்தையே அழித்துவிடும் என அறிவியல் வல்லுநர் ஜேக்கப் காக்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகின் முன்னணி செய்யறிவு தொழில்நுட்ப நிறுவனமான, ஆந்த்ரோபிக் (ஏஐ) நிறுவனத்திலிருந்து தந்து பணியை ராஜினாமா செய்துள்ள அவர், “நான் ஆந்த்ரோபிக் நிறுவனத்தில் இருந்து எனது பணியை ராஜினாமா செய்துள்ளேன். கடந்த மூன்று ஆண்டுகளாக ஓபன் ஏஐ மற்றும் ஆந்த்ரோபிக் நிறுவனங்களில் ஆராய்ச்சியாளராக பணியாற்றியுள்ளேன். 

இந்த நிறுவனங்கள் பொறுப்புடன் செயல்படவில்லை. அவர்கள் மனித கட்டுப்பாட்டைத் தாண்டி தன்னைத்தானே மேம்படுத்திக்கொள்ளும் சூப்பர் இண்டெலிஜென்ஸை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். இது மனிதக் குலத்தின் உயிருடன் விளையாடுவதற்குச் சமம். இந்த செய்யறிவு, வருங்காலத்தில் நம்மை அழித்துவிடும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் உறுதியாக நம்புகின்றனர். இந்த செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள்,  பொதுவெளியில் ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு என அறிவுப்பூர்வமாகப் பேசிக்கொண்டாலும், தனிப்பட்ட முறையில் அவர்கள் தங்கள் பயத்தினை வெளிப்படுத்துகின்றனர். 

அடுத்த சில ஆண்டுகள் உண்மையில் எப்படி இருக்கும்? என்பதனை ஆராய்ச்சியாளர்கள் பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார். இந்த கருத்தை, அதே நிறுவனத்தில் பணிபுரியும் ஆராய்ச்சியாளர் இவான் ஹீபிங்கர் ஆமோதித்ததுடன், செயற்கை நுண்ணறிவு முழுமையாக மனித கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்வதற்கான  தீர்வு இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.  

Source link