ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் வெளியாக உள்ள ராமாயணம் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த படத்தில் பணியாற்றியது என் கனவு நனவானது போன்ற உணர்வு ஏற்படுகிறது எ ன்று பாடகரும் இசையமைப்பாளரருமான அர்மான் மாலிக் கூறியுள்ளார்.
உலகளவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்திய திரைப்படங்களில் ஒன்று ராமாயணா. 2 பாகங்களாக தயாராகியுள்ள இந்த படததில் ராமனாக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக யஷ், ஹனுமாக பாபி தியோல், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனார். நித்தீஷ் திவாரி இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஹான்ஸ் ஜிம்மர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் இசையமைத்துள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 5-ந் தேதி இந்த படம் வெளியாக உள்ளது.
இந்த படத்தின் பாடல் பதிவின்போது ஏ.ஆர்,ரஹ்மானுடன் பணியாற்றியது ஒரு கனவு நனவானது போன்ற உணர்வை தருகிறது என பாடகரும் இசையமைப்பாளருமான அர்மான் மாலிக் கூறியுள்ளார்., ரன்பீர் கபூர் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் ‘ராமாயணா’ திரைப்படத்திற்காக பாடல் பதிவு செய்த தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் இந்த படத்தில் பணியாற்றியுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் ஆகியோர் “முழுமையான புராணக்கதைகள்/மாபெரும் லெஜண்ட்ஸ் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த படத்தில் ‘மங்கள் ரங்’ பாடலின் கன்னடப் பதிப்பான ‘மங்கள சங்கமா’ பாடலை பெலா ஷிண்டேயுடன் இணைந்து பாடியுள்ள அர்மான், இந்த திரைப்பட இசையின் ஒரு பகுதியாக இருந்தது குறித்த தனது “பிரமிப்பூட்டும் அனுபவம்” பற்றி வெரைட்டி இந்தியாவிடம் (Variety India) அவர் பேசினார். அப்போது ராமாயணா போன்ற ஒரு திரைப்பட இசையில் இடம்பெற்றது “கனவு மெய்ப்பட்டது” போன்றது என்று அர்மான் கூறினார்.
தனது அனுபவம் குறித்து அவர் கூறுகையில், “இது முற்றிலும் பிரமிப்பூட்டுகிறது. ரஹ்மான் சாரும் ஹான்ஸ் ஜிம்மரும் உலகளவில் நாம் சினிமாவை அனுபவிக்கும் விதத்தையே மாற்றியமைத்த மாபெரும் சாதனையாளர்கள். நமது இந்திய பாரம்பரிய இசை வேர்களும், உலகளாவிய பிரமாண்ட சினிமா இசையும் சங்கமிக்கும் ஒரு திரைப்பட இசையில் நான் பங்கேற்றது என் கனவு நனவான தருணமாகும். சர்வதேசப் பயணத்திற்குச் செல்வதற்கு முன்பு மும்பையில் இந்தப் பாடலைப்பதிவு செய்தோம். ஆனால் ஏ.ஆர்.ரஹ்மானுடன் ஸ்டுடியோவில் இருக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
ராமாயணா பாடலை எனது பாணியில் பாட ரஹ்மான் எனக்கு முழு சுதந்திரம் அளித்தார். அது எனக்கு “மிகவும் மதிப்பிற்குரிய விஷயம். ரஹ்மான் சாரின் நம்பிக்கைதான் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாராட்டு. பாடல் பதிவின் போது எனக்கு வழிகாட்டிய கன்னட பாடல் வரிக் குழுவிற்கும், டப்பிங் குழுவினருக்கும் மிக்க நன்றி. கன்னடத்தில் பாடுவது எப்போதுமே எனக்கு “சொந்த வீட்டில் இருப்பது போன்ற உணர்வை” தருகிறது.
தரவரிசைப் பட்டியலின் எண்களை விட, மக்களிடம் இருந்து கிடைக்கும் தூய்மையான, நிபந்தனையற்ற அன்பே எனக்கு மிக முக்கியமான விஷயம். அவர்கள் என்னை உண்மையிலேயே தங்கள் வீட்டுப் பிள்ளையாக நடத்துகிறார்கள். ‘ஒந்து மலேபில்லு’ மற்றும் இப்போது ‘மங்கள சங்கமா’ போன்ற பாடல்கள் எனக்கு அங்கே ஒரு குடும்பத்தையே பெற்றுத் தந்துள்ளன என அர்மான் மாலிக் கூறியுள்ளார்.
So incredibly excited to share ‘Mangala Sangama’ from #Ramayana with all of you! Any opportunity to sing in Namma Kannada is always a pure joy for me. Doing this for Rahman sir makes it even more special ❤️🙏🏻 @ARRahman @WorldOfRamayana #RanbirKapoor #SaiPallavi #Yash @TSeries @Malhotra_Namit #NiteshTiwari #BelaShende #DrKumarVishwas #KarthikSaragur https://t.co/imL9JeFrOR
— Armaan Malik (@ArmaanMalik22) October 25, 2026
முன்னதாக, அர்மான் மாலிக் தனது எக்ஸ் (X) பக்கத்தில் ‘மங்கள சங்கமா’ பாடலின் சிறு பகுதியை பகிர்ந்து, “உங்கள் அனைவருடனும் ராமாயணா திரைப்படத்தில் இருந்து ‘மங்கள சங்கமா’ பாடலைப் பகிர்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நம்ம கன்னடத்தில் பாடுவதற்கு கிடைக்கும் எந்தவொரு வாய்ப்பும் எனக்கு எப்போதுமே அளப்பரிய மகிழ்ச்சியைத் தரும். அதை ரஹ்மான் சாருக்காகச் செய்வது அதை மேலும் சிறப்புமிக்கதாக்குகிறது” எனக் குறிப்பிட்டிருந்தார்.
