ஒசாகாவை வீழ்த்தினார் ரிபாகினா: யு.எஸ்., ஓபன் டென்னிசில்

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் காலிறுதிக்கு ரிபாகினா, மிர்ரா ஆன்ட்ரீவா, ஜெங் உள்ளிட்டோர் முன்னேறினர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றில், உலகின் ‘நம்பர்-2’ வீராங்கனை, கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, ஜப்பானின் ஒசாகாவை (‘நம்பர்-13’) எதிர்கொண்டார்.

முதல் செட்டை 6-1 என எளிதாக வசப்படுத்திய ரிபாகினா, அடுத்த செட்டை 6-4 என கைப்பற்றினார். ஒரு மணி நேரம், 7 நிமிடம் மட்டும் நடந்த போட்டி முடிவில் ரிபாகினா, 6-1, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தார்.

மிர்ரா அபாரம்

மற்றொரு நான்காவது சுற்றில் ரஷ்யாவின் மிர்ரா ஆன்ட்ரீவா (‘நம்பர்-5’), ஆஸ்திரியாவின் பொடபோவாவை (‘நம்பர்-25’) எதிர்கொண்டார். 2 மணி நேரம், 25 நிமிடம் நீடித்த இப்போட்டியில் மிர்ரா, 5-7, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்று, முதன் முறையாக யு.எஸ்., ஓபன் காலிறுதிக்கு முன்னேறினார்.

அமெரிக்காவின் கோகோ காப் (‘நம்பர்-4’), 6-1, 6-4 என, சக வீராங்கனை ஜோவிச்சை (‘நம்பர்-14’) சாய்த்து, காலிறுதிக்குள் நுழைந்தார். உலக தரவரிசையில் 121 வது இடத்திலுள்ள குயின்வென் ஜெங், ‘நம்பர்-8’ வீராங்கனை போலந்தின் இகா ஸ்வியாடெக்கை 7-5, 6-3 என வீழ்த்தி ‘ஷாக்’ கொடுத்தார்.

ஆண்கள் ஒற்றையர் நான்காவது சுற்றில் ‘நம்பர்-1’ அந்தஸ்து பெற்ற ஜெர்மனியின் ஜிவரேவ், இத்தாலியின் லுாசியானோவை சந்தித்தார். இதில் ஜிவரேவ், 6-2, 6-2, 7-6 என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தார். மற்ற போட்டிகளில் ரஷ்யாவின் கச்சனோவ், ஜெர்மனியின் பிளாக்ஸ் வெற்றி பெற்றனர்.

Source link