தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய் அங்கு, சில்வர்ஸ்டோன் பகுதியில் நடைபெறும் கார் பந்தயத்தை கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார் இந்த பந்தயத்தில் நடிகர் அஜித் ரேசராக களமிறங்கும் நிலையில், விஜய் – அஜித் இருவருமு் சந்தித்துக்கொண்ட வீடியோ பதிவு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த விஜய், கடந்த 2024-ம் ஆண்டு கட்சி தொடங்கி 2026 சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பெரிய வெற்றிய பெற்றார். ஆனால் பெரும்பான்மை இல்லாததால், கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சியை பிடித்துள்ள நிலையில், விஜய் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இந்த ஆட்சி அமைந்து 4 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், கடந்த மாதம் 4-ந் தேதி இந்த அரசின் முதல் பட்ஜெட் கூட்டம் நடைபெற்றது.
கடந்த ஒரு மாத காலமாக தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 8-ந் தேதி கூட்டம் நிறைவு பெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழகத்திற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய், லண்டன் பயணம் மேற்கொண்டார். கடந்த செப்டம்பர் 10-ந் தேதி இரவு சென்னையில் இருந்து புறப்பட்ட விஜய், லண்டன் சென்ற நிலையில், இன்று (செப்டம்பர் 13) லண்டன் சில்வர்ஸ்டோனில் நடைபெறும் கார் பந்தையத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
🚨 Exclusive: CM Vijay and Thala Ajith Kumar meet-up 😍 Peak moment ✨ #CMVijay#AK#Silverstone#ThalapathyVijay#AjithKumar#Racing#Livepic.twitter.com/6OPMSJlPED
— 𝕯𝖊𝖊𝖕𝖆𝖐🦅 (@Deepak32763716) September 12, 2026
இந்த பந்தயத்தில், நடிகரும், கார் ரேசருமான அஜித் போட்டியாளராக பங்கேற்கும் நிலையில், விஜய் லண்டன் பயணம் செல்லும்போதே அஜித்தை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது, அதன்படி இன்று கார் பந்தயத்தை தொடங்கி வைக்க வந்த விஜய், அஜித்தை நேரில் சந்தித்தார். அஜித்தை பார்த்தவுடன் பாசமாக ஓடிவந்த விஜய் கட்டிப்பிடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதன்பிறகு இருவரும் இணைந்து ரசிகர்களை பார்த்து கையசைத்தனர். இது குறித்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
That historic moment we waited for 🥰🥰 #thala#thalapathy 🔥🔥🔥🔥🔥🔥🔥 pic.twitter.com/d8R6zI2BTp
— Dinesh (@nobody_offl) September 12, 2026
மேலும் விஜய் முதல்வர் ஆனபிறகு, அஜித்தின் அம்மா மறைந்தபோது நேரில் சென்று ஆறுதல் கூறியிருந்தார். அது ஒரு துக்க நிகழ்வாக இருந்த நிலையில், தற்போது விஜய் – அஜித் இருவரும் சந்தித்த இந்த மகிழ்ச்சிகரமாக நிகழ்வை பார்க்க சில்வர்ஸ்டோன் பகுதியில் ரசிகர்கள் குவிந்தனர். மேலும் பலரும் த.வெ.க கட்சி கொடி மற்றும் துண்டுடன் வலம் வந்த வீடியோ பதிவுகளும் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
