கட்டுக்கடங்காத காட்டுத் தீ; கனடாவிற்கு ட்ரம்ப் எச்சரிக்கை

கனடாவில் கட்டுக்கடங்காத காட்டு தீ பரவி வருகிறது. இதனால், கனடாவின் பல்வேறு பகுதிகளில் கடும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளது. இந்த புகை மண்டலம் கனடாவை மட்டுமல்லாமல் அண்டை நாடான அமெரிக்காவிற்கும் பரவியுள்ளது. இதனால்,  அமெரிக்காவின் சில நகரங்கள் கடும் புகையால் சூழப்பட்டுள்ளது. 

இதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில், ” கனடா தனது நாட்டில் உள்ள காடுகளையும், புதர் செடிகளையும் முறையாகப் பராமரிக்கத் தவறிவிட்டது. அதனால் கட்டு தீ ஏற்பட்டுள்ளது. கனடாவில் ஏற்பட்டுள்ள இந்த கட்டு தீயினால் உருவான, ஆரோக்கியத்தைக் கெடுக்கும் நச்சுப் புகை அமெரிக்காவை சூழ்ந்துள்ளது. இதனால், அமெரிக்காவிற்கு ஈடுகட்ட முடியாத இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த இழப்பைக் கனடாவிடம் பெறுவதற்கு, தற்போது உள்ள வர்த்தக வரியை உயர்த்த பரிசீலிக்கிறேன்” என்று எச்சரித்துள்ளார்.  

கனடாவில் 930 இடங்களில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஓண்டாரியோ மாகாணத்தில் மட்டும் சுமார் 190 இடங்களில் காட்டு தீ ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.  இந்த காட்டுத் தீயினால் ஏற்பட்டுள்ள நச்சுப் புகையினால், கனடா மற்றும் அமெரிக்காவைச் சார்ந்த சுமார் 100 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.  

Source link