கனடாவில் ‘பீப் பார்பிகியூ’ சமைத்ததை தடுத்த இந்திய பெண்.. கடைசியில் எங்கே நிறுத்தியிருக்கு பாருங்க

ஒட்டாவா: கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு வீடு உள்ளது. அந்த வீட்டின் வாடகைக்கு குடியிருந்தவர் பீப் சமைத்துள்ளார். பார்பிகியூ சமைத்த போது, வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்திய வம்சாவளி பெண், தனது மத நம்பிக்கையைக் காரணம் காட்டி, பார்பிக்யூ கிரில்லில் இருந்த உணவை அவர் கட்டையால் தள்ளிவிட்டுள்ளார். தொடர்ந்து அவரே போலீசாரை அழைத்த நிலையில், விசாரணை நடத்திய போலீசார், இந்திய வம்சாவளி பெண் மீது தான் தவறு உள்ளதாக குற்றம்சாட்டி, அவரை கைது செய்து அழைத்து சென்றனர்.இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவிவருகிறது.
கனடாவில் இந்திய வம்சாவளி பெண் ஒருவருக்கும், அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் கனடாவைச் சேர்ந்த நபருக்கும் இடையே நடந்த மோதல் எங்கே ஆரம்பித்தது என்ன நடந்தது என்பதை பார்ப்போம். இந்தியாவில் இருந்து கனடாவிற்கு பிழைக்க போன பலர் அங்கயே வீடு, கார், நிலம் வாங்கி செட்டில் ஆவதுடன், அந்த நாட்டு குடிமகன்களாகவும் ஆகிவிடுகிறார்கள்.அப்படி செட்டில் ஆன இந்திய வம்சாவளி பெண்ணுக்கு கனடாவில் சொந்தமாக தோட்டத்துடன் கூடிய வீடுகள் உள்ளது. அந்த வீட்டில் கனடினயன் ஒருவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.
அவர் அசைவ உணவு சாப்பிட்டு வந்துள்ளார். ஆனால் இந்திய வம்சாவளி பெண்ணுக்க அவர் மாட்டிறைச்சி சாப்பிடுவது பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதற்காக அந்த கனடியனை பல வகையில் விமர்சித்து கண்டித்துள்ளார். தொடர்ந்து அவரை பல வகையில் இந்திய வம்சாவெளி பெண் துன்புறுத்தி வந்தாராம். வீடு புகுந்து உணவை தூக்கி எறிவது, திட்டுவது, கடுமையாக விமர்சிப்பது, எதற்கு எடுத்தாலும் எறிந்து விழுவது என அவரது நடவடிக்கை நாளுக்கு நாள் மோசமாகி வந்ததாம். அவர் அனைத்தையும் வீடியோ எடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் வாடகைக்கு குடியிருந்த கனடியன் அண்மையில் தனது தனது நண்பருடன் சேர்ந்து வீட்டின் வெளிப்புறத்தில் பீப் ‘பார்பெக்யூ’ செய்ய முயன்றுள்ளார். அதற்கு அந்த இந்தியப் பெண், “என் வீட்டைக் கொளுத்த பார்க்கிறாயா? இதையெல்லாம் செய்யக் கூடாது. வேண்டுமென்றால் உன் நண்பன் வீட்டிற்குப் போய் சமைத்துக் கொள்” என்று தடுத்திருக்கிறார். அதற்கு அந்த வாடகைதாரரான கனடியன், “எனக்கு 50 வயதாகிறது, நான் ஒழுங்காக வாடகை தருகிறேன், நண்பரை வீட்டிற்கு அழைக்க எனக்கு உரிமை உண்டு” என்று வாதிட்டிருக்கிறார்.

A post shared by Tiwanafarmservivor (@tiwanafarmservivor)

வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்தப் பெண் வாடகைதாரரின் வீட்டின் பூட்டை மாற்றியுள்ளார். மேலும், வாடகைதாரரைக் கல்லால் அடித்துத் தாக்கியதாகவும், வீட்டின் மின்சார இணைப்பைத் துண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இவை அனைத்தும் வாடகைதாரரின் கேமராவில் பதிவாகி இன்ஸ்டாகிராமில் வெளியானது. கடைசியாக வெளியான வீடியோவில், அந்தப் பெண்ணை கனடாவின் சூரி நகரப் போலிஸார் கைது செய்து அழைத்துச் செல்வது போல் காட்டப்பட்டுள்ளது. இருப்பினும், போலிஸார் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வரவில்லை. வீடியோவை பார்த்த பலர், “இது ஏதோ சினிமா படம் போல் இருக்கிறது” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே நடந்த சம்பவங்கள் எல்லாம் கனடா மற்றும் இந்தியாவில் வைரலான நிலையில், வாடகைக்கு குடியிருந்த நபர்,இந்திய வம்சாவெளி பெண்ணை குற்றம்சாட்டி, ‘திவானா ஃபார்ம் சர்வைவர்’ என்ற தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் இந்தக் காணொளிக் காட்சிகளைப் பகிர்ந்துள்ளார்,., அந்தப் பெண்ணுடனான பல சந்திப்புகளை ஆவணப்படுத்தி, அவை தனது சொத்தில் நடந்த தொடர்ச்சியான துன்புறுத்தல் மற்றும் தலையீட்டிற்கான ஆதாரங்கள் என்று அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில் கூறுகையில், “முதலில், எனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கும், தங்களது சொந்த அனுபவங்களைப் பகிர்ந்தவர்களுக்கும், செய்திகளை அனுப்பியவர்களுக்கும், தங்களது கருத்துச் சான்றுகளைத் தந்தவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் அதை உண்மையிலேயே மனதாரப் பாராட்டுகிறேன், மேலும் சிலர் வெளிப்படுத்திய கோபத்தையும் ஆதங்கத்தையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

A post shared by Tiwanafarmservivor (@tiwanafarmservivor)

அதே நேரத்தில், மிரட்டல்கள், வன்முறை, துன்புறுத்தல் அல்லது இதில் சம்பந்தப்பட்ட எவருக்கும் உடல் ரீதியான தீங்கு விளைவிக்க நினைப்பதை நான் ஒருபோதும் ஆதரிக்க மாட்டேன். இந்தப் பக்கம் அதற்கானது அல்ல, மேலும் யாரும் சட்டத்தைத் தன் கையில் எடுத்துக்கொள்வதை நான் விரும்பவில்லை. அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நடந்த சம்பவங்களைப் பதிவு செய்யவும், மக்கள் தங்களது சொந்த அனுபவங்களைப் பற்றிப் பேசுவதற்கான ஒரு இடத்தை வழங்கவுமே இந்தப் பக்கம் உருவாக்கப்பட்டது. மக்களுக்குத் தங்களின் கருத்துக்களைத் தெரிவிக்க முழு உரிமையும் உண்டு, ஆனால் தயவுசெய்து விஷயங்களை மரியாதையுடனும் சட்டத்திற்கு உட்பட்டும் வைத்திருங்கள்.
எல்லோரின் ஆதரவிற்கும் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். தயவுசெய்து உங்கள் அனுபவங்களையும் தகவல்களையும் தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள், ஆனால் மிரட்டல்கள் மற்றும் வன்முறைகளை இதிலிருந்து தள்ளி வையுங்கள்” இவ்வாறு கூறியுள்ளார்.