கனிம வளங்களை கொண்டு செல்ல விதிக்கப்பட்டுள்ள நீக்குங்கள்; முதல்வர் விஜய்க்கு கேரளா முதல்வர் கடிதம்

சென்னை: அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்களை கொண்டு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்குமாறு முதல்வர் விஜய்க்கு கேரளா முதல்வர் சதீஷன் கடிதம் எழுதியுள்ளார்.

பிற மாநிலங்களுக்கு கருங்கல், ஜல்லி மற்றும் எம் சாண்ட் உள்ளிட்ட கனிமங்களை கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தமிழக அரசு தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. புதுச்சேரி, காரைக்காலுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்களை கொண்டு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்குமாறு முதல்வர் விஜய்க்கு கேரளா முதல்வர் சதீஷன் கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில் கேரள முதல்வர் சதீஷன் கூறி இருப்பதாவது: மாநிலங்களுக்கு இடையேயான கருங்கல் பாறைகள், கருங்கல் ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் விதிமுறைகளை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது என்பதை நான் அறிவேன். தமிழக அரசின் தடையால் கேரளாவில் தேசிய நெடுஞ்சாலை பணிகள் கடுமையாக பாதிக்கப்படும்.

தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் கேரளாவுக்கு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தென்னிந்தியாவுக்கும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. இவை பிராந்திய இணைப்பை வலுப்படுத்தவும், சரக்குப் போக்குவரத்துத் திறனை மேம்படுத்தவும், வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை எளிதாக்கவும், இரு மாநிலங்களிலும் உள்ள முக்கிய பொருளாதார மையங்களுக்கான அணுகலை அதிகரிக்கவும் உதவும்.

தங்கள் அரசின் கொள்கைக்குப் பின்னால் உள்ள நோக்கங்களையும், இயற்கை வளங்களை நிலையான முறையில் மேலாண்மை செய்ய வேண்டியதன் அவசியத்தையும் நான் முழுமையாக உணர்கிறேன். ஜல்லி கற்களைத் தடையின்றிப் கொண்டு செல்வதற்கு ஏற்ற வகையில், உரிய விலக்குகள் அளிப்பது அல்லது தகுந்த ஒரு நடைமுறையை உருவாக்குவது குறித்துப் பரிசீலிக்க தங்களின் கனிவான தலையீட்டைக் கோருகிறேன். தங்களின் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு கேரள முதல்வர் கூறியுள்ளார்.

Source link