கன்னி ராசிக்கு 80% அதிர்ஷ்டம்.. பணம் சேரும்.. ஆனால் 15 நாட்கள் கவனம்!

Rasi palan this week: செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையிலான (ஆவணி 28 முதல் புரட்டாசி 3) காலகட்டத்தில் கன்னி ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

இந்த வாரத்தில் ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் ஆரம்பிக்கவுள்ளது. புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி மஹாளயபட்சம் ஆரம்பிக்கிறது. மஹாளய அமாவாசை அக்டோபர் 10 ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் ஏழைகளுக்கு உணவு தானமாக அளிப்பது, அரிசி பருப்பு வாங்கி கோயிலுக்கு கொடுப்பது நன்மை பயக்கும்.

இதைத்தொடர்ந்து, அக்டோபர் 11 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. அந்த வகையில், செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையிலான (ஆவணி 28 முதல் புரட்டாசி 3) காலகட்டத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

கன்னி ராசியினருக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு, மேலதிகாரிகள் என எல்லா விஷயத்திலும் கவனம் தேவை. தர்க்கத்தை தவிர்ப்பது நல்லது. வீடியோ கால், போட்டோ ஷேர் செய்யும் விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. சிந்தனை, நியாபகம் எல்லாம் எங்கோ இருக்கும். அரசியல்வாதிகள் அதீத கவனமாக இருக்க வேண்டும்.

தலைவலி, ஒற்றை தலைவலி வரும் பாதிப்பு உள்ளது. சட்டத்திற்குப் புறம்பானவர்களின் நிழல் கூட படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கண் பாதிப்பு, படபடப்பு தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. கண்ணாடி உடைவது, டென்ஷன், கோபப்படுவது போன்றவை இருக்கும். பிள்ளைகளால் பிரச்சனைகள் வரும். அப்பாவின் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது.

மூத்த பிள்ளைக்கும், உங்களுக்கும் பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது. அக்கவுண்ட்ஸில் பிழை வருவது, எலும்புகளில் பாதிப்பு வருவது, வாக்கு கொடுப்பதால் பிரச்சனை வருவது என வரும் 15 நாட்களுக்கு பல பிரச்சனைகள் வரும். எல்லா விஷயத்தையும் ஒரு மாதத்திற்கு தள்ளிப்போடுவது நல்லது. லாப ஸ்தானத்தில் குரு இருப்பதால் பெரிய பாதிப்புகள் வராது.

பண வரவு நன்றாக இருக்கும். எப்போதும், குழப்பம், டென்ஷனில் இருப்பதைத் தவிர்ப்பது நல்லது. பொறுமையாக எல்லா விஷயத்தையும் கையாள்வது நல்லது. அவசரமாக முடிவெடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. முக்கியமான முடிவுகள், பிரச்சனைகளில் நிதானமாக இருக்க வேண்டும். விரயத்தில் சூரியன் இருப்பதால் வெளியூர் செல்வது நன்மை பயக்கும். வீட்டை விட்டு பிரிந்திருப்பது நல்லது. ஆரோக்கியத்தை மட்டும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வியாழக்கிழமைகளில் விநாயகர், பெருமாள் வழிபாடு ஏற்றத்தைத் தரும். குடும்பம் தொடர்பான விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை. கணவனாக இருந்தால் மனைவியின் உடல்நிலை, மனைவியாக இருந்தால் கணவரின் உடல்நிலையில் மிகுந்த கவனம் தேவை.

இருசக்கர வாகனத்தில் செல்லும் காதலன், காதலி மிகுந்த கவனமாகச் செல்வது நல்லது. அனுமன் சாலிஷா, அனுமன் காயத்ரி சொல்வது ஏற்றத்தைத் தரும். நரசிம்மர், உக்கிர தெய்வ வழிபாடு நன்மையைத் தரும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 80 சதவீதம் நன்றாக இருக்கும்.