முதமைச்சர் விஜய்க்கு மாறன் குடும்பம் மிக மிக வேண்டிய குடும்பம். நேற்று மாறன் பற்றி முதலமைச்சர் விஜய் பேசினார், அவைக்குள் இல்லாதவர் பற்றி பேசக்கூடாது என விதியில் உள்ளது என்றார்.
ஆதாரமின்றி முதலமைச்சர் விஜய் பேசியதை சீக்க வேண்டும் என்று எ.வ. வேலு கூறினார்.
இதற்கு பதில் உரை பேசிய அமைச்சர் நிர்மல் குமார் கருணாநிதி எங்கு எங்கெல்லாம் பணம் வாங்கினார் என சர்க்காரிய கமிஷன் கூறியுள்ளது என்றார்.
கருணாநிதி மீதான 6 குற்றச்சாட்டுகளுக்க ஆதாரம் உள்ளது, சிபிஐ வழக்கு உள்ளது.
அதேபோல் ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டார் என்பதற்கு எந்த குறிப்பும் இல்லை.
பிரதமராக இருந்த இந்திரா காந்தியை அவதூறாக பேசியதால் தான் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். இந்திரா காந்திம் 21-வது அம்ச திட்டம் ஒன்று உள்ளது என ஸ்டாலின் அவதூறாக பேசினார்.
மிசா குறித்த அமைச்சர் நிர்மல்குமார் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
எ.வ. வேலு பேசினால் நாங்களும் விரிவாக பேச வேண்டியிருக்கும் என்று கூறியஅமைச்சர் செங்கோட்டையன் சர்க்காரியா கமிஷன் குறித்து முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பேசியது அவை குறிப்பில் உள்ளது என்றார்.
