கர்நாடகாவில் சோகம்; வீட்டில் பிரிட்ஜ் வெடித்ததில் ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி

பெங்களூரு: கர்நாடகாவில் ஒரு வீட்டில் ரெப்ரிஜிரேட்டர் (பிரிட்ஜ்) வெடித்த சம்பவத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கர்நாடகா மாநிலம் பெலகாவி பகுதியில் ஒரு வீட்டில் திடீரென பிரிட்ஜ் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இறந்தவர்கள் கஜானன் தாமோன் (65), ரோஷன் தாமோன் (21), சாரதா தாமோன் (45) மற்றும் பாரதி தாமோன் (50) என அடையாளம் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் ப்ரியா (28) மற்றும் கங்கா (25) ஆகிய இருவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இரவு நேரத்தில் தூங்கி கொண்டு இருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மின் கசிவு காரணமாக பிரிட்ஜில் திடீரென அதிகப்படியான மின் அழுத்தம் பாய்ந்து வெடித்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.இது போன்ற மின்கசிவு விபத்துகளைத் தவிர்க்க வீடுகளில் உள்ள மின்சாதனப் பொருட்களை முறையாகப் பராமரிப்பது மிகவும் அவசியமாகும்.

Source link