சென்னை: ” அதிகாரிகள் அலட்சியத்தால், கடந்த2024ம் ஆண்டு கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 69 பேர் உயிரிழந்தனர்,” என்று ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தனது விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
விசாரணை ஆணையம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் பகுதிகளில், கடந்தாண்டு ஜூன், 18 மற்றும் 19ல் மெத்தனால் கலந்த சாராயம் குடித்ததில், 230 பேர் பாதிக்கப்பட்டனர். இதில், 69 பேர் இறந்தனர். 161 பேர் பாதிக்கப்பட்டனர். விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்கள், மெத்தனால் சப்ளை செய்தவர்கள் என, 24 பேரை கைது செய்தனர். ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை அமைத்து, விஷ சாராயம் குடித்து பாதித்தவர்கள், அவர்களது குடும்பத்தினர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காவல் துறை,வருவாய் துறையினரிடம் விசாரணை நடந்தது.
கோகுல்தாஸின் விசாரணை அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
விசாரணை
பாதிப்பு சம்பவம் தெரிந்த உடன் கள்ளச்சாராயம் புழங்கும் இடங்களில் அதிகரிகள் எச்சரிக்கை செய்யவில்லை.விழுப்புரத்தில் 2023 கள்ளச்சாராய துயர சம்பவத்தில் 2024 சம்பவம் வரை கள்ளச்சாராயத்தை தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீது துறை சார்ந்து விசாரணை துவங்க வேண்டும். தொழில்துறைக்கு பயன்படுத்தப்படும் மெத்தனால், சட்டவிரோத கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு செல்வதை கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு கல்வி வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
