கிளாஸ்கோ: காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் துவக்க விழா இன்று துவங்குவதற்கு முன்னதாகவே, குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கைஹைன் பதக்கத்தை உறுதி செய்தார்.
2026ம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டு போட்டி இன்று முதல் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி வரையில் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெறுகிறது. இதில், இந்தியா சார்பில் 124 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க இருக்கின்றனர். இதற்கான துவக்க விழா இன்று இரவு நடைபெற உள்ள நிலையில், குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கைஹைன் பதக்கத்தை உறுதி செய்தார்.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனையான, லவ்லினாமகளிர் 75 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியில் ‘பை’ பிரிவின் மூலம் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்தார். அரையிறுதியில் வெற்றி பெற்று பைனலுக்கு செல்லும்பட்சத்தில் அவருக்கு தங்கம் அல்லது வெள்ளி கிடைக்கும்.
