’கிளாச்சிக்கோ காமன்வெல்த்-2026’ போட்டி நடைபெற்று வருகிறது. இந்திய வீரர்கள் பதக்கங்களை வென்று வருகின்றனர். ஆண்களுக்கான 65 கிலோ பளு தூக்கும் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். இதற்கு நமது நாட்டின் பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் உட்பட பல்வேறு தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி, முழங்கை காயம் உள்ளிட்ட பல்வேறு உடல்நல சிக்கல்களைத் தாண்டி கடுமையான முயற்சியினால் இந்த பதக்கத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அதே கிளாஸ்கோ காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில், இந்தியாவின் பிந்தியா ராணி தேவி பெண்கள் 58 கிலோ எடைப் பிரிவில் மொத்தம் 199 கிலோ தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம், நடப்பு காமன்வெல்த் தொடரில் இந்தியா தனது 6வது பதக்கத்தைப் பதிவு செய்துள்ளது.
