பந்தயக் களத்திற்கு வந்த முதலமைச்சர் விஜய்யை அஜித்குமார் நெகிழ்ச்சியுடன் வரவேற்று, இருவரும் பரஸ்பரம் கட்டித்தழுவி தங்களது பல ஆண்டுக்கால நட்பைப் பகிர்ந்து கொண்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகின்றன. மற்றொருபுறம், லண்டனுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரபல முன்னணி நடிகை த்ரிஷாவும் இந்த சர்வதேசப் பந்தயத்தை நேரில் காண்பதற்காகச் சில்வர்ஸ்டோன் மைதானத்திற்கு வருகை தந்துள்ளார். அதன்படி, பார்வையாளர்கள் கேலரியில் அமர்ந்து த்ரிஷாவும்பந்தயத்தைக் கண்டு ரசித்தார்.
அங்கு முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா ஆகியோர் ஒரே இடத்தில் இருந்தவாறு பந்தயத்தை ரசிக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று பேசுபொருளாக மாறியுள்ளன. முன்னதாக கார் பந்தயத் துவக்க விழாவின் போது, “தலைவரோட சூட் (SUIT) புடிச்சிட்டு ஒரு போட்டோ எடுக்கணும்..” என்று முதலமைச்சர் விஜய் ஆசையாகக் கேட்டு, நடிகர் அஜித்தின் பந்தய ஆடையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட சுவாரசியமான நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதோடு தமிழ் சினிமாவின் இருபெரும் உச்ச நட்சத்திரங்களான இவர்களின் இந்த நிஜ உலக தல – தளபதி சந்திப்பு மற்றும் இந்த சுவாரசியமான உரையாடல் குறித்த செய்திகள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
