காலிறுதியில் ஸ்ரீகாந்த்: சீன மாஸ்டர்ஸ் பாட்மின்டனில்

ஷென்சென்: சீன மாஸ்டர்ஸ் பாட்மின்டன் காலிறுதிக்கு இந்தியாவின் ஸ்ரீகாந்த் முன்னேறினார்.

சீனாவில், ‘சூப்பர் 750’ அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், கனடாவின் விக்டர் லாய் மோதினர். அபாரமாக ஆடிய ஸ்ரீகாந்த் 21-18, 21-19 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 21-17, 22-24, 21-9 என்ற செட் கணக்கில் பிரான்சின் கிறிஸ்டோ போபோவ், டோமா ஜூனியர் போபோவ் ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் தான்வி சர்மா, ஜப்பானின் டோமோகா மியாசகி மோதினர். இதில் தான்வி சர்மா 17-21, 21-18, 16-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

கலப்பு இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா கிராஸ்டோ ஜோடி 18-21, 18-21 என சீனதைபேயின் லியு குவாங் ஹெங், ஹசு யின் ஹுய் ஜோடியிடம் தோல்வியடைந்தது.

Source link