காவிரி நீர் தராத கர்நாடகா : சட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்களுடன் முதல்வர் அவசர ஆலோசனை

சென்னை: காவிரி நீர் தராமல் கர்நாடகா மறுக்கும் நிலையில், சட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்து, அமைச்சர்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்திற்கு, காவிரியிலிருந்து கர்நாடகா வழங்க வேண்டிய நிலுவை நீர் 21.9 டி.எம்.சி.,யாக அதிகரித்து உள்ளது. தற்போது கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் வரத்து முற்றிலும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதேநிலை தொடர்ந்தால், பல மாவட்டங்களில், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். சம்பா பருவ நெல் சாகுபடியிலும் சிக்கல் ஏற்படும்.

மாநிலத்துக்கு உரிய நீர் பெறுவதற்கான , சட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்து, முதல்வர் விஜய் தலைமையில், தலைமைச் செயலகத்தில், அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ், நிர்மல்குமார், தலைமைச் செயலர் சாய்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கர்நாடகாவிடம் காவிரி நீரை பெற, உச்ச நீதிமன்றத்தை அணுகும்படி, சட்ட வல்லுனர் குழுவிற்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தி உள்ளார்.

Source link