காவி மயமாகிறதா மேற்கு வங்கம்?

கொல்கட்டா: மேற்கு வங்கத்தில் முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. 15 ஆண்டுகளாக ஆட்சி செய்த திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜியை தோற்கடித்து, சுவேந்து அதிகாரி முதல்வராகி உள்ளார். உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்தை போல, சுவேந்துவும் காவி உடை அணிய ஆரம்பித்து விட்டார். பல சாமியார்களுடன், ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற கோஷத்துடன் ஊர்வலம் நடத்தினார்.

முதல்வராக இருந்தபோது, ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டாலே மம்தாவுக்கு பிடிக்காது. இப்போது மேற்கு வங்கம் உ.பி.,யாக மாறி வருகிறதோ என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

தங்களுக்கு எதிராக முதல்வர் சுவேந்து செயல்படுகிறாரோ என, மேற்கு வங்கத்திலுள்ள சிறுபான்மையினரிடையே ஒரு அச்சம். ‘நான் எந்த ஓர் சிறுபான்மையினருக்கும் எதிரானவன் அல்ல. ஆனால், ஹிந்துவை பற்றி பேசிக்கொண் டுதான் இருப்பேன்’ என, சொல்கிறார் சுவேந்து அதிகாரி.

இதற்கிடையே அடுத்த மாதம் கொல்கட்டாவில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்திற்கு மிகப்பெரிய விழா நடத்த உள்ளார் சுவேந்து. கொல்கட்டாவில் புகழ் பெற்ற ஜாதவ்பூர் பல்கலை அமைந்துள்ளது. டில்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலையை போல, இங்கு இடதுசாரிகள் மாணவர்கள் படிக்கின்றனர்.

இதை மாற்ற முயற்சிகள் எடுத்து வருகிறார் முதல்வர் சுவேந்து. முதல் கட்டமாக இந்த பல்கலையின் பெயரை தத்துவ ஞானியும், சுதந்திர போராட்ட வீரருமான அரவிந்தரின் பெயரை சூட்ட முதல்வர் சுவேந்து முயற்சி எடுத்து வருகிறார். வழக்கம் போல இதற்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Source link