கியூபாவுக்கு போர்க்கப்பல்களை அனுப்புவோம்; டிரம்ப்

அமெரிக்காவில் இடைத்தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப் பேசியதாவது;

மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றங்கள் தணியும். அப்போது அமெரிக்க போர்க்கப்பல்கள் கியூபா கடற்கரை வழியாக வரும். அங்குள்ள கப்பல் ஒன்றை கடற்கரையில் இருந்து சுமார் 50 கடல்மைல் தொலைவில் நிறுத்துவோம். அவர்கள் தங்களின் கைகளை உயர்த்துவார்கள்.

அப்போது அங்குள்ள அரசை அகற்ற முயற்சிகள் எடுக்கப்படும். அதற்காக வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை அங்கு அனுப்பி வைப்போம்.

இவ்வாறு டிரம்ப் பேசினார்.

அமெரிக்காவுக்கு மிக அருகில் கியூபா, அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் இணங்காமல் கம்யூனிச கொள்கைகளுடன் செயல்பட்டு வருகிறது. அந்த நாட்டை தங்கள் வழிக்கு கொண்டு வர, அமெரிக்க அரசு, பொருளாதார தடைகளை விதித்து நெருக்கடி அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Source link