பின்பு தாமதமாக இதையறிந்த குடும்பத்தினர் அதிர்ச்சியாகினர். ரூ.5 லட்சம் மதிப்புள்ள வெள்ளி சொம்பைக் கவனிக்காமல் மூதாட்டிக் குப்பையில் போட்டதையறிந்து, அவர்கள் இது குறித்து குப்பை மாற்றும் நிலையத்திற்குச் சென்று தகவல் தெரிவித்தனர்.
ஆனால், அவர்கள் இந்த குப்பைகள் திடக்கழிவு மேலாண்மைக்கு அனுப்பப்பட்டு விட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து குடும்பத்தினர் செம்பை மீட்க மாநகராட்சி அதிகாரிகளை அணுகினர். அவர்கள் செம்பை மீட்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனர். ஆனால், அதற்குள் அந்த குப்பைகள் காகிதம், பிளாஸ்டிக் மற்றும் உலகம் எனத் தரம் பிரிக்கும் மையத்திற்குச் சென்றுவிட்டது. அங்கிருந்து அந்த சொம்பு உலோக கழிவு மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து, டன் கணக்கில் குவித்து வைக்கப்பட்டுள்ள உலோக கழிவுகளில் அந்த சொம்பு கலந்துவிட்டது. இந்நிலையில், குடும்பத்தாரின் வேண்டுகோளுக்கு இணங்க ஊழியர்கள் சுமார் 48 மணி நேரம் அந்த சொம்பைத் தேடினர். கடும் போராட்டத்திற்குப் பிறகு அந்த சொம்பு கண்டு பிடிக்கப்பட்டது.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ”இந்தூரில் இருந்து தினமும் சுமார் நூற்றுக்கணக்கான டன் கழிவுகள் இங்கு வந்து சேர்கின்றன. அவற்றில் இந்த சொம்பைக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமமான காரியமாக இருந்தது . இருப்பினும், அது ரூ.5 லட்சம் மதிப்பு கொண்ட பொருள். அது தொலைத்துவிட்ட கூடாது என்பதால் முயற்சி செய்தோம். அது கிடைத்துவிடது” என்று தெரிவித்தார்.
