குப்பை மறுசுழற்சி ஆலையில் விஜய் ஆய்வு- கூடி நின்ற பொதுமக்கள்

சென்னை சேத்துப்பட்டில் சென்னை மாநகராட்சியின் பங்களிப்பு மற்றும் தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் இயங்கி வரும் இயற்கை எரிவாயு தயாரிக்கும் ஸ்ரீனிவாசா வேஸ்டேஜ் ஆலையில் கழிவுகளை மறுசுழற்சி செய்து இயற்கை எரிவாயு தயாரிக்கும் மாலையில் தமிழக முதல்வர் விஜய் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

 2003 ஆம் ஆண்டு இந்த மையம் சென்னையைத் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. மக்கும் குப்பைகளிலிருந்து இயற்கை எரிவாயு தயாரிக்கும் நிறுவனத்தில் தற்போது தமிழக முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொண்டுள்ளார். கோயம்பேடு சந்தை மற்றும் ஹோட்டலில் கிடைக்கும் கழிவுகளை வைத்து இயற்கை முறையில் எரிவாயு தயாரிக்கப்படுகிறது. முதல்வர் விஜய் இந்த பகுதிக்கு ஆய்விற்கு வருவதை அறிந்த அந்தப் பகுதி மக்கள் அங்கு திரண்டு விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அண்மையில் கடல் நீரைக் குடிநீராக சுத்திகரிக்கும் மையம், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் முதல்வர் விஜய் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது. 

Source link