81 அடி உயர ராமர் சிலையை அமைத்த இளைஞர் கைது

வங்கதேசத்தில் 81 அடி உயர ராமர் சிலையை அமைத்ததால், இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாதாக கூறப்படுகிறது. இதனால், தலைநகர் டாக்காவில் போராட்டம் வெடித்துள்ளது.   

கைப்பந்தா மாவட்டத்தில் பாலாஸ்பாரி என்ற இடத்தில் ஹரிதாஸ் என்பவர் 81 அடி உயர ராமர் சிலையை நிறுவினார். இதையடுத்து, அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது ரூ.9.35 கோடி சந்தேகத்திற்குரிய பணப் பரிவர்த்தனை செய்துள்ளதாகக்  குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. இருப்பினும், அவர் இந்த சிலையை அமைத்ததாலேயே, இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

இந்நிலையில், அந்நாட்டில் உள்ள சிறுபான்மை மக்களுக்கு எதிராகக் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகப் புத்த-கிறித்துவ-இந்து ஒற்றுமை அமைப்பு வேதனை தெரிவித்துள்ளது. மேலும், இந்த அமைப்பு கைது செய்யப்பட்டுள்ள ஹரிதாஸை விடுதலை செய்ய வேண்டுமெனப் போராட்டத்தை நடத்தியது. இதில், அந்த அமைப்​பின் பொதுச் செய​லா​ளர் மணீந்​திர குமார் நாத் கூறுகையில், “ராமர் சிலை அமைத்​ததற்​காக ஹரி​தாஸ் கைது செய்​யப்​பட்​டுள்​ளதை எங்​களால் ஏற்​றுக் கொள்ள முடி​யாது. கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் 3 ஆயிரம் அத்துமீறல்கள் நடைபெற்றுள்ளன. கோயில்கள் தகர்க்கப்பட்டுள்ளன” என்றார்.  

வங்கதேசத்தில் சிறுபான்மையின மக்களுக்குப் பாதுகாப்பு அற்ற சூழல் நிலவுவது வருத்தம் அளிக்கிறது. இதுகுறித்து இந்​திய வெளி​யுறவு அமைச்​சகத்​தின் செய்​தித் தொடர்​பாளர் ரந்​தீர் ஜெய்​ஸ்​வால் கூறும்​போது, “வங்கதேசத்​தில் தீவிர​வாத சக்​தி​களை ஒடுக்​கி, சிறுபான்மை சமூக மக்​களின் பாது​காப்பை அந்​நாட்டு அரசு உறுதி செய்ய வேண்​டும் என்று இந்​தியா எதிர்​பார்க்​கிறது” என்​று தெரிவித்துள்ளார்​.   

இது குறித்து, வங்கதேசம் மட்டுமல்ல எந்த நாடாக இருந்தாலும் சிறுபான்மையின மக்களை துன்புறுத்துவதோ, அரசியல் ஆதாயத்திற்காக அவர்கள் மீது அவதூறு பரப்புவதோ அல்லது சிறுபான்மை மக்களைப் பெரும்பான்மை மக்களின் எதிரிகளாகச் சித்தரிப்பதோ மிகவும் தவறான மற்றும் மோசமான செயலாகும் எனப் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  

Source link