பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் தொடங்கி முதல் வாரம் முடிந்துள்ள நிலையில், வார இறுதி நாளான இன்று, விஜய் சேதுபதி என்ட்ரி கொடுத்துள்ளார். இது குறித்த ப்ரமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரியாலிட்டி ஷோக்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் விஜய் டிவியில் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகும் ஷோ பிக்பாஸ். இதுவரை 9 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 10-வது சீசன் கடந்த செப்டம்பர் 6-ந் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கியது. இதில் முதல் 7 சீசனை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், 8 மற்றும் 9-வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வழங்கினார். அதனைத் தொடர்ந்து 10-வது சீசனையும் அவரே தொகுத்து வழங்கி வருகிறார்.
கடந்த செப்டம்பர் 6-ந் தேதி தொடங்கியுள்ள இந்த 10-வது சீசன் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த ஆண்டு, இதுவரை இல்லாத வகையில் இந்நிகழ்ச்சி தொடக்க மேடையிலேயே சில போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதே சமயம், ‘லட்சுமி பிரியா, ஷாதிகா, நடிகை சாந்தினி தமிழரசன், நடிகர் பிளாக் பாண்டி, தொகுப்பாளர் வினோத் பாபு, நடிகர் குமரன், தொகுப்பாளர் ராகவன் ரகுநாதன், பிரித்விநாத், முத்தழகி, தன்யா, ஒப்பனை அஷ்மிதா, சீரியல் நடிகர் அவினாஷ், நடிகர் முகேஷ், குக் வித் கோமாளி பிரபலம் அன்சார், சீரியல் நடிகை ஸ்வாமிதா, ஜாவித் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
நிகழ்ச்சி தொடங்கிய 3-வது நாளில், நடிகர் பிளாக் பாண்டி உடல்நலக்குறைபாடு காரணமாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனிடையே வார இறுதியான நேற்று, விஜய் சேதுபதி இந்த வீட்டுக்குள் ஒரு பதவி இருக்கு என்று சொன்னவுடன் ஒரு பெரிய லிஸ்ட் வந்துவிட்டது. இதை நிறைவேற்ற முடியுமா என்று தெரியவில்லை. தலைவரை தேர்வு செய்தவர் ஆலோசனை செய்து வழி நடத்தாமல் அவரே ஆட்சியை கலைத்துள்ளார். உங்கள் ஆட்சி கவிழ்ந்துபோச்சு என்று கூறியிருந்தார்,
இதனிடையே வார இறுதுி நாளான இன்று (செப்டம்பர் 13) வெளியாகியுள்ள ப்ரமோவில், நிகழ்ச்சியில் எண்ட்ரி ஆகும் விஜய் சேதுபதி, போட்டியாளர்கள் சோகமாக இருப்பதை பார்த்து, நான் இப்போது ஷோ நடத்துவதா அல்லது உங்களுக்கு ஆறுதல் சொல்வதா என்று தெரியவில்லை என்ற விஜய் சேதுபதி சொல்ல, அவினாஷ் சிரித்துக்கொண்டே, நின்றால் படபடப்பாக இருக்கிறர் என்று சொல்கிறார்.
அடுத்த ப்ரமோவில் கும்பலில் கோவிந்தா போட்டால் தலைவன் ஆகவே முடியாது என்று நீங்கள் நினைக்கிற 2 பேரை சொல்லுங்கள் என்று சொல்ல, அனைவரும் சொல்கின்றனர், இதில் முனியம்மாவை தான் பலரும் சொல்கின்றனர். வினோத் பாபு மணிவண்ணன் குறித்து சொல்லும்போது அவர் சண்டை போடுபவர் அல்ல, பிரச்னையை உருவாக்குபவர் என்று சொல்ல, சண்டை போடுபவர்கள் எப்படி கும்பலில் கோவிந்தா போடுபவர்களாக இருக்க முடியும் என்று விஜய் சேதுபதி கேட்கிறார். இந்த ப்ரமோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
