குற்றவாளி எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை: முதல்வர் விஜய் திட்டவட்டம்

சென்னை: குற்றவாளிகள் யாராக இருந்தாலும், எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது இந்த அரசின் நிலைப்பாடு என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை, மூன்று நாட்கள் அரசு விடுமுறைக்கு பின், இன்று கூடியது. முதல்வர் விஜய் அளித்த பதிலுரை பின்வருமாறு: சாலைகள், ஆலைகள் அமைப்பதால் மாநிலத்தின் வளர்ச்சி தீர்மானிக்கப்படுவதில்லை; சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருந்தால் தொழில் முதலீடு வரும், தொழில்கள் முறையாக நடைபெறும். சட்டத்தை மதித்து நடப்பவர்களுக்கு காவல்துறை உற்ற நண்பராக இருக்க வேண்டும்.

முதல்வர், அமைச்சர், அதிகாரிகள் என யாராக இருந்தாலும் போலீசாரின் சட்டப்பூர்வ நடவடிக்கைகளில் தலையீடு இருக்க கூடாது என வலியுறுத்தி உள்ளேன். குற்றவாளிகள் யாராக இருந்தாலும், எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது இந்த அரசின் நிலைப்பாடு. இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.

Source link