கேள்விக்குறியாகும் பத்திரிகை சுதந்திரம்: மத்திய அரசிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 21 செய்தி நிறுவனங்கள் வழக்கு

டிஜிட்டல் செய்தி இணையதளங்களின் செயல்பாடுகளுக்கும் பத்திரிகைச் சுதந்திரத்துக்கும் மத்திய அரசின் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம் (DPDP Act) அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி, இந்தியாவின் 21 முன்னணி செய்தி நிறுவனங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

தரவு பாதுகாப்பு சட்டம்

இந்தியாவின் டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம், , 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று சட்டமாக்கப்பட்டது. இருப்பினும், இந்தச் சட்டம் மற்றும் அதற்கான விதிமுறைகள் (DPDP Rules, 2025) 2025 நவம்பர் 13 முதல் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் நோக்கமாக குடிமக்களின் டிஜிட்டல் தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாப்பதும், தரவுகளைச் சேகரிக்கும் நிறுவனங்களின் பொறுப்புகளை வரையறுப்பதும் இந்த சட்டத்தின் முக்கியமான நோக்கமாகும்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு

தற்போது இந்தச் சட்டம் மக்களின் தனியுரிமை மற்றுன் பத்திரிக்கை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தை ஏற்படுத்தும் என்று கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது

குறிப்பாக இந்தியாவின் கோடீஸ்வரர்களான முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி ஆகியோருக்குச் சொந்தமான நிறுவனங்கள் உட்பட 21 செய்தி வெளியீட்டாளர்கள் அடங்கிய குழு ஒன்று, இந்தியாவின் தனியுரிமைச் சட்டத்தை நீதிமன்றத்தில் எதிர்த்து வழக்குத் தொடுத்துள்ளது.

அச்சட்டம் புலனாய்வுப் பணிகளை நசுக்கும் என்றும், பத்திரிகையாளர்களின் தகவலாளர்களை அடையாளம் காண வழிவகுக்கும் என்றும் அக்குழு வாதிட்டுள்ளதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

கருத்து சுதந்திரத்திற்கு பாதிப்பு

கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட 698 பக்க மனுவில், பத்திரிகைச் செயல்பாடுகளுக்குச் சட்டப்பூர்வமான விதிவிலக்கு வழங்கப்படாதது, அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள கருத்து சுதந்திரத்தைப் பாதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இச்சட்டம் டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின் 7, 17(2), 18, 19, 27, 29, 36, 37, 44(3) ஆகிய பிரிவுகளையும், அதன் கீழ் உருவாக்கப்பட்ட 16, 17, 23 ஆகிய விதிகளையும் DNPA எதிர்த்துள்ளது.

இந்தச் சட்டப் பிரிவுகள், அரசியலமைப்புச் சட்டத்தின் 14-வது பிரிவு வழங்கும் சமத்துவ உரிமைக்கும், 19(1)(a) பிரிவு வழங்கும் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்துக்கும் முரணாக இருக்கிறது என்பது DNPA தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதம் அரசாங்கத்துடன் நடந்த கூட்டத்தில், இந்தச் சட்டம் பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாக்கும் என்று ஊடக நிறுவனங்களுக்கு உறுதிமொழிகள் வழங்கப்பட்டன. ஆனால், ஐரோப்பிய ஒன்றியம், சிங்கப்பூர் மற்றும் பிரிட்டனில் உள்ளது போல பத்திரிகையாளர்களுக்கு எழுத்துப்பூர்வமான விலக்கு இல்லாதது கவலையளிப்பதாக, இந்தியாவின் டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்கள் சங்கம் (டி.என்.பி.ஏ) உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரகசிய மனுவில் தெரிவித்துள்ளது. இந்த மனுவை ராய்ட்டர்ஸ் ஆய்வு செய்துள்ளது.

பத்திரிகை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்

இந்த சட்டத்தின் விதிகளிலிருந்து ஊடக அமைப்புகளுக்கு விலக்கு அளிக்கப்படாத்தால் இது பத்திரிக்கை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றூ கூறி செய்தி வெளியீட்டாளர்கள் சங்கம் எதிர்த்துள்ளது .

டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம், ஒருவரின் தனிப்பட்ட தகவல்களைச் சேகரிப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை இந்த சட்டம் விதிக்கிறது. ஆனால், செய்திகளைச் சேகரித்து மக்களுக்கு உண்மைகளைத் தெரிவிக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இதே கட்டுப்பாடுகளை விதிப்பது சரியல்ல என்று DNPA தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும், தகவல்களைக் கோருவதற்குச் சட்டம் வழங்கும் அதிகாரங்கள், செய்தியாளர்களின் தகவலாளர்களை அம்பலப்படுத்தக்கூடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இது செய்தியை மூடும் நிலைக்கு தள்ளும் மற்றும் பத்திரிகை சுதந்திரத்தை முடக்கும் என்று எச்சரித்துள்ளார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது

குறிப்பாக இந்த சட்டம் புலனாய்வு இதழியலை ஒரு தீங்கற்ற நிலைக்கு தள்ளி விடும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014ல் மோடி பதவியேற்றதிலிருந்து இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் குறைந்து வருவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Source link