தமிழகத்தில் பத்துக்கும் அதிகமான இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முன்னாள் அமைச்சரான, திமுகவின் கே.என்.நேருவுக்கு சொந்தமான இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
திருச்சி தில்லை நகரில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவிற்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரன் தொடர்புடைய இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் இறங்கியுள்ளது. ரவிச்சந்திரனுக்கு சொந்தமான டிவிஹெச் என்ற கட்டுமான நிறுவனத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. இதேபோல் சென்னை அடையாறு, திருவான்மியூர், அண்ணா நகர், ஆர்.ஏ.புரம் உள்ளிட்ட இடங்களிலும் சோதனையானது நடைபெற்ற வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
