முன்னாள் அமைச்சர் கே.என். நேரு வுக்கு சொந்தமான இடங்களில் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இப்படியான நிலையில் நகராட்சி நிர்வாகத்துறையில் ரூ. 1020 கோடி ஊழல் நடந்துள்ளதாக கே.என். நேரு மீதான லஞ்ச ஒழிப்புத்துறையின் எஃப்ஐஆர் வெளியாகியுள்ளது.
கடந்த ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சரான கே.என். நேருவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டனர். திருச்சி தில்லை நகரில் உள்ள அவருடைய வீடு மற்றும் சென்னையில் அடையாறு, அண்ணா நகர், மயிலாப்பூர், ஆரியபுரம், திருவான்மியூர் உள்ளிட்ட 19-க்கும் மேற்பட்ட இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்றது.
அதோடு அவருடைய சகோதரர் கேஎன். ரவிச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடந்தது. தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், திமுக எதிர்க்கட்சி துணைத்தலைவர் கே.என். நேருவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பினை கிளப்பி இருந்தது. இப்படியான நிலையில் கே.என்.நேரு மீதான குற்றச்சாட்டுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை எஃப்ஐஆரை வெளியிட்டுள்ளது.
