Zodiac Signs Who Hide Feelings,காதல், பழி என உணர்ச்சிவசப்பட்டாலும் தங்களுடைய மனதை திறந்து பேசாத 5 ராசிகள் – 5 zodiac signs who often keep their feelings hidden, even in love and anger

கடக ராசி

கடக ராசி அதிபதி சந்திரன். இவர் மனோகாரகன் என அழைக்கப்படுகின்றார். பல நேரங்களில் உணர்வுகள், மனதை கட்டுப்படுத்தக்கூடிய நபராகவும், பலர் தன்னுடைய மனதை சிறந்த புத்தகமாகவும் வைத்திருப்பார்கள். இந்த கடக ராசியை சேர்ந்தவர்கள் உணர்ச்சி நீதியான இணைப்பு, பாதுகாப்பு மற்றும் நெருங்கிய உறவுகளுடன் தொடர்பு கொள்வது, ஒருவருடன் வசதியாக உணரும்போது மட்டுமே அதை வெளிப்படுத்தக்கூடிய நபராக இருப்பார்கள். அதை தாண்டி யாரிடம் தன்னுடைய உணர்வுகளை உடனே உறுதிப்படுத்த மாட்டார்கள்.

இவர்களிடம் உள்ள சவாலான விஷயம் என்னவெனில் தங்களுடைய உணர்வை வெளிப்படுத்துவது, இவர்களுக்கு பாதுகாப்பற்றவர்களாக உணர வைக்கும். பல நேரங்களில் தங்களுடைய உணர்ச்சி, உறவுகளின் ஏதேனும் குழப்பத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சமும் இவர்களிடம் இருக்கும்.

ஒருவர் மீது காதல் வயப்பட்டிருந்தாலும் இவர்களுடைய உறவை அவசரப்பட்டு செல்ல தயங்குவார்கள். உறவில் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

துலாம் ராசி

துலாம் ராசி அன்பர்களுக்கு மதிப்பெண் சுக்கிரன் என்பது தான் இவர்களிடம் காதல், தோழமை, உணர்வு பூர்வமான இணைப்பு என பல்வேறு முக்கிய விஷயங்களில் வேகமாக மற்றும் உணர்வு பூர்வமாக அணுகுவார்கள்.

எந்த ஒரு உறவிலும் உற்சாகத்தை அனுபவிக்க நினைப்பார்கள். அதேசமயம் அந்த உறவில் நியாயமானதாகவும், தங்களுக்கான மரியாதை கிடைக்காதா என்பதில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள்.

இதன் காரணமாக தங்களுக்கு பிடித்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதை வெளிப்படுத்த வேண்டாம் என்ற மனநிலையில் இருப்பார்கள். உணர்வு பூர்வமான முதலீடு செய்வதில் கவனம் செலுத்துவார்கள். இவர்களுக்கு வசீகரமான வார்த்தைகளை விட, நிலையான முயற்சியும் மரியாதையும் அதிக பலனைத் தரும்.

விருச்சிக ராசி

விருச்சிக ராசி சேர்ந்தவர்களின் முக்கிய அம்சமே அவர்களுடைய ரகசிய திறன் தான். உண்மையில் இவர்களை ஏற்கக்கூடிய சில விஷயங்கள் நடக்கும் போது, உணர்வு ரீதியாக அதில் ஈடுபாடு காட்டுவார்கள். பல நேரங்களில் ஆரம்பத்திலேயே அதை தீவிரமான நிலை இருக்கவும் வாய்ப்பு உண்டு. இருப்பினும் அவர்கள் உணரக்கூடிய அனைத்தையும் உடனடியாக யாரிடமும் வெளிப்படுத்துவார்கள் என சொல்ல முடியாது. நம்ம நேரங்களில் இவர்கள் அனைத்தையும் ரகசியமாகவே வைத்துக் கொள்வார்.
மேலும் எந்த ஒரு விஷயம் நடந்தாலும் அதை உன்னிப்பாக கவனிக்க கூடிய ராசியாகும். குறிப்பாக ஒவ்வொரு நபரையும் கவனிப்பார்கள். அவர்கள் கொடுக்கக்கூடிய வாக்குறுதிகளும், சொன்னதைப் போல அதை நிறைவேற்றுகிறார்கள் என்பதை கவனிப்பார்கள்.
காதல், திருமண வாழ்க்கையை தாண்டி, இவர்கள் பணியிடத்தில் நடக்கக்கூடிய கடினமான சூழ்நிலை கூட யாரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். குறிப்பாக தங்கள் துணையுடன் பகிர்ந்து கொள்ள தயக்கப்படுவார்கள். அனைத்தையும் மனதிலேயே போட்டுக் கொள்வார்கள்.

தனுசு ராசி

தனுசு ராசி சேர்ந்தவர்களின் எண்ணம் மற்றும் செயல்பாடு தீப்பொறி போன்றது. விரைவாக தோன்றிய விரைவாக மறைந்துவிடும். எல்லா நேரங்களில் அப்படி இல்லாமல் தீப்பொறி, தவறான விஷயங்கள் பெரிய தீப்பிழம்பாக மாறி விடுமோ என்ற மனநிலையில் இருப்பார்கள். அதன் காரணமாக தங்களுடைய வாழ்க்கையில் நம்பிக்கை இல்லாத விஷயங்களை வெளிப்படுத்த மாட்டார்கள்.
இவர்கள் தங்களுடைய வாழ்க்கை மற்றும் செயல்பாடுகளில் போரார்வம் கொண்ட நபர்கள் மீது விற்கப்படுவார்கள். இது அவர்களுக்கு மனதளவில் உற்சாகத்தை தரும்.

இந்த ராசியை சேர்ந்த நண்பர்களுக்கு அடிபடையான தனித்துவமே சுதந்திரத்தையும், தனித்தனியாக செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பது தான். இதன் காரணமாக கட்டுப்பாடு இல்லாத சுதந்திரமான செயல்பாடுகளில் ஈடுபட நினைப்பார்கள். பல நேரங்களில் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துவதால் ஏதேனும் தடை ஏற்பட்டு விடுமோ என்று பட்சத்தில் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்த மாட்டார்கள்.

மீன ராசி

மீன ராசி பொருத்தம் வரையில் இவர்கள் கற்பனை உலகில் வாழக்கூடியவர்கள். இவர்களுக்கு காதல் தொடர்பாக பல நேரங்களில் உணர்ச்சி வசப்படுவார்கள். குறிப்பாக எங்களுடைய உறவு அல்லது காதல் தொடர்பாக கற்பனை திறனால் சிறிய விஷயங்களை கூட பெரிய விஷயமாக கருதுவார்கள். மேலும் ஒருவருடன் பழகும் போதும், ஒரு பாராட்டும் போதும் அவர்களுடன் இருக்கக்கூடிய உறவு உண்மையில் நம்பகத்தன்மை வாய்ந்ததா என்பதை தீர்மானிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்வார்கள்.

இவர்கள் செய்யக்கூடிய செயல்கள் சில நேரங்களில் சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும், அதை நாம் பகுத்தறிவு இல்லாத விஷயம் என கருத முடியாது. ஏனெனில் தங்களுடைய உணர்வுகளை முதிர்ச்சியாக வெளிப்படுத்த நினைப்பார்கள். அன்பான மற்றும் அழகான விஷயங்களை வெளிப்படுத்தவே இவர்களுக்கு விருப்பமானதாக இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரை பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டது மற்றும் இது தொழில்முறை அல்லது நிபுணர் ஆலோசனையாகக் கருதப்படாது. வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன், வாசகர்கள் ஒரு தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுமாறு அல்லது நிபுணர் வழிகாட்டுதலைப் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Source link