கையெழுத்து போட தயாரான ரேவதி; கடைசி நேரத்தில் ஆட்டத்தை கலைத்த கார்த்திக்: கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

ஓடி ஓடி ஜெயந்தியை கவனிக்கும் திவாகரன்.. கர்ணாவால் கடுப்பான புவனா – சின்னஞ்சிறு கிளியே இன்றைய எபிசோட் அப்டேட் 

சின்னஞ்சிறு கிளியே சீரியலின் நேற்றைய எபிசோடில் திவாகரன் ஜெயந்தியை ஓடி ஓடி கவனிக்க கிருபா அதை பார்த்து கடுப்பான நிலையில் இன்று, கிருபா ஜெயந்திக்கு என்ன வேண்டும் என கேட்டு கேட்டு செய்ய வீட்டில் அனைவரும் ஆச்சரியமும் குழப்பமும் அடைகின்றனர். திவாகரனின் மாற்றத்திற்கு காரணம் என்ன என்பதை அறிந்த புவனா மட்டும் செம கடுப்பில் இருக்கிறாள். 

பிறகு திவாகரன் ரூமுக்கு சென்று ஜெயந்தியின் துணிகளை எடுத்துச் சென்று துவைக்க கர்ணாவும் இந்துவும் இதை மொட்டை மாடியில் இருந்து ரசிக்கின்றனர். கர்ணா சிரிக்க இந்து இப்ப எதுக்கு சிரிக்கிற என்று கேட்க முரட்டுத்தனமா இருக்குங்க ரொமான்டிக்கா மாறுனா இப்படித்தான் இருப்பாங்க போல என்று இந்து மீது கை போட அவள் அவனை முறைக்க கையை எடுத்து விடுகிறான். 

அடுத்ததாக திவாகரன் ஜெயந்திக்கு நெயில் பாலிஷ் போட்டு விடுவதாக சொல்லி அழைத்துச் செல்ல இங்கே கர்ணா இந்துவுக்கு நெயில் பாலிஷ் போட்டு விடுவதாக ரூமுக்கு அழைத்து வருகிறான். புவனா ரூமுக்குள் என்ன நடக்கிறது என மறைந்து பார்க்க இதை கவனித்த இந்த காலுக்கு போட்டு விடு என காலை காட்ட கர்ணா நெயில் பாலிஷ் போட்டு விட புவனா கடுப்பாகிறாள். 

அதைத்தொடர்ந்து திவாகரன் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க ஜெயந்தி ஒரு பெரிய லிஸ்ட்டை கொடுக்க அவளை அழைத்து கொண்டு கடைக்கு செல்கிறான். திவாகரனுக்காக தூக்க மாத்திரை கலந்து வைத்திருந்த பாலை விஷ்வா குடித்து தூங்கி விடுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கையெழுத்து போடப் போன ரேவதி.. கடைசி நொடியில் தடுத்து நிறுத்திய கார்த்தி – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ரேவதி சாமுண்டீஸ்வரி முடிவை ஏற்று கையெழுத்து போட முடிவெடுத்த நிலையில் இன்று, ரேவதி கையெழுத்து போட தயாராக சாமுண்டீஸ்வரி முதலில் ராஜராஜனை கையெழுத்து போட சொல்கிறாள். ராஜராஜன் என்னால போட முடியாது என கோபத்தைக் கொட்ட ரேவதி அவரை சம்மதிக்க வைத்து கையெழுத்து போட வைக்கிறாள். 

இப்படி வீட்டில் உள்ள ஒவ்வொருவரையும் சாமுண்டீஸ்வரி கையெழுத்து போட வைக்க கடைசியாக ரேவதி மட்டும் கையெழுத்து போட வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறாள். மறுபக்கம் கார்த்திக் வீட்டுக்கு வர அங்கு ரேவதி இல்லை என தெரிந்து பாட்டியிடம் விசாரிக்க ஒரு கட்டத்தில் பாட்டி உண்மையை சொல்லி விட கார்த்திக் ரேவதி கையெழுத்து போடக்கூடாது. அது சரியாக இருக்காது என தடுத்து நிறுத்த சாமுண்டீஸ்வரி வீட்டுக்கு கிளம்பி வருகிறான். 

இங்கே ரேவதி கையெழுத்து போட போகும் சமயத்தில் அங்கு வந்த கார்த்தி ரேவதியை தடுத்து நிறுத்தி டாக்குமென்டை கிழித்து போட்டு என்ன பண்ணிட்டு இருக்க என்று திட்டி வீட்டிற்கு அழைத்து செல்கிறான். நான் இந்த இரண்டு குடும்பத்தையும் சேர்க்கணும்னு வந்து இருக்கேன். அப்படி இருக்கும் போது நீ கையெழுத்து போட்டு கொடுத்தா எந்த காலத்திலும் இந்த குடும்பம் சேராது என்று சொல்கிறான். இப்படியான நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

ராதா கிருஷ்ணனாக மாறிய அர்ஜுன், சாமந்தி.. அரசிக்கு காத்திருந்த அதிர்ச்சி  – சாமந்தி இன்றைய எபிசோட் அப்டேட் 

சாமந்தி சீரியலின் நேற்றைய எபிசோடில் சாமந்தி கிருஷ்ண ஜெயந்திக்கான ஏற்பாடுகளை செய்து முடித்த நிலையில் இன்று, சாமந்தி மகேந்திரன் இடம் சென்று ஐயா எல்லா ஏற்பாடும் ரெடி போட்டோ மட்டும் வரணும் என்று சொல்ல மகேந்திரன் கோடீஸ்வரனுக்கு போன் செய்து போட்டோ எங்கே என்று கேட்க அவன் காரில் உட்காந்து வாழைப்பழம் சாப்பிட்டுக் கொண்டு எங்கு தேடியும் போட்டோ கிடைக்கவில்லை என்று சொல்கிறான். 

இதனால் மகேந்திரன் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்க சாமந்தி நீங்க ஃப்ரீயா விடுங்க நான் பார்த்துக்குறேன் என்று சொல்கிறாள்‌. அதன் பிறகு சாமந்தி அர்ஜுனை சந்தித்து டிரைவர் தம்பி டிரைவர் தம்பி என கெஞ்சி கேட்கிறாள். அடுத்ததாக அரசியின் தோழிகள் வீட்டுக்கு வர நடு வீட்டில் ராதாகிருஷ்ணன் பெரிய சிலையாக நிற்க அதைப் பார்த்து வியப்படைகின்றனர். அப்போது மகேந்திரன் அது சிலையில்ல போட்டோ கிடைக்காத காரணத்தினால் அர்ஜுனும் சாமந்தியும் அப்படி வேஷம் போட்டு நிற்பதாக சொல்ல அரசி டென்ஷன் ஆகிறாள். ஆனால் எதையும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருக்கிறாள்.

ராதாகிருஷ்ணன் ஆக இதுவரை காதலுடன் ஒருவரை பார்த்துக் கொள்ள இதை வந்தவர்கள் போட்டோ எடுத்து மகிழ்கின்றனர். பிறகு அனைவரும் சாப்பிட உட்கார ராதா கிருஷ்ணனையும் அழைக்க இவர்களும் அவர்களுடன் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட ஈஸ்வரி இதை வைத்து சாமந்தியை மிரட்ட சாமந்தி அவசரப்பட்டோமோ என பதறுகிறான். பிறகு அரசியின் தோழிகள் அர்ஜுன் சாமந்தியுடன் போட்டோ எடுத்துக் கொண்டு கிளம்ப அரசி மிகுந்த கோபத்துடன் வீட்டுக்குள் வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Source link