கொதிக்கும் பசிபிக் கடல்: 30°C-ஐ தொட்ட வெப்பம்… இந்தியாவுக்கு காத்திருக்கும் பேராபத்து..!

மனித நடவடிக்கைகளால் ஏற்படும் புவி வெப்பமயமாதலும் பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வுமே இந்த ‘சூப்பர் எல் நினோ’வுக்கு முக்கியக் காரணங்களாகும்.

இதன் தாக்கம் 2027 ஆம் ஆண்டு வரை நீடிக்கக்கூடும் என்பதால், நீர் மேலாண்மை மற்றும் விவசாயத் துறைகளில் இந்தியா தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.

இந்தியாவுக்கு காத்திருக்கும் பாதிப்புகள் என்னென்ன?

எல் நினோ 7 மாதங்களில் இருந்து 24 மாதங்கள் வரை நீடிக்க வாய்ப்புள்ளது. இந்த எல் நினோவால்தான் இந்தியாவில் தென்மேற்கு பருவமழை வழக்கத்திற்கு குறைவாக பதிவானதாகவும், வரும் காலங்களில் வழக்கத்திற்கு மாறாக கடுமையான வெப்பநிலை நிலவும் எனவும் கூறப்படுகிறது.

பசிபிக் கடலில் ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண வெப்ப மாற்றம், உலகளாவிய வானிலையை தலைகீழாக மாற்றுவதுடன் இந்தியாவுக்குப் பின்வரும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

Source link