சென்னை: முன்னாள் முதல்வர் ஸ்டாலின் புகாரையடுத்து, கொளத்துார் தொகுதியில், 14 ஓட்டுச் சாவடிகளில் இன்று ஓட்டு சரிபார்ப்பு பணி நடக்க உள்ளது.
கடந்த சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை, கடந்த மே 5ம் தேதி நடந்தது. இதில், கொளத்துார் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஸ்டாலின், த.வெ.க., வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் 8,795 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
இந்நிலையில், சில சாவடிகளில் ஓட்டு எண்ணிக்கையின்போது குளறுபடி நடந்துள்ளதாக, தி.மு.க., தலைவரும் முன்னாள் முதல்வருமான ஸ்டாலின், தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்திருந்தார்.
புகாரின்படி, இன்று தி.மு.க., – அ.தி.மு.க., – த.வெ.க., உட்பட அனைத்து கட்சிகளின் முன்னிலையில், கொளத்துார் தொகுதியில் மொத்தமுள்ள 286 ஓட்டுச்சாவடிகளில், குளறுபடி என குறிப்பிடப்பட்டுள்ள 14 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டு எண்ணிக்கை சரிபார்ப்பு பணி இன்று நடைபெற உள்ளது.
