சட்டசபையில் திடீரென ஆவேசமாகி வாக்குவாதம் செய்த சி.வி. சண்முகம்.. அவையை விட்டு வெளியேற முயற்சி: என்ன நடந்தது? – cv shanmugam suddenly became agitated in the assembly and attempted to walk out

இன்றைய தினம் சட்டமன்றம் கூடியதும் 110 விதிகளின் கீழ் முதல்வர் ஜோசப் விஜய் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் தனித்தீர்மானத்தை கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து உறுப்பினர்கள் பேசிய நிலையில், சபாநாயகர் அதிமுகவின் தளவாய் சுந்தரத்தை பேச அழைத்த நிலையில், சி.வி.சண்முகம் திடீரென ஆவேசமாக அவையை விட்டு வெளியேற முயன்றது பரபரப்பினை கிளப்பியுள்ளது.

EWS இட ஒதுக்கீடு தொடர்பாக விவாதம்

எடப்பாடி பழனிசாமியுடன் தொடர்ச்சியாக மோதல் போக்கினை மேற்கொண்ட சி.வி. சண்முகம் அதிமுகவின் எம்எல்ஏவாக சட்டமன்றத்தில் செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் தளவாய் சுந்தரம் EWS இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக அவையில் பேசிய நிலையில், அதற்கு சி.வி. சண்முகம் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தார். EWS வேண்டாம் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு எனவும் திட்டவட்டமாக பேசினார். அதோடு இபிஎஸ்ஸை பாராட்டியும் தனது உரையில் சில கருத்துக்களை அவர் தெரிவித்தது மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்தன.

தளவாய் சுந்தரத்திற்கு பேச சபாநாயகர் அனுமதி

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக முன்மொழியப்பட்ட தனித்தீர்மானத்தின் மீது பேசுவதற்கு அதிமுக சார்பாக தளவாய் சுந்தரத்திற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் பேச ஆரம்பிக்கும்போது, திடீரென சி.வி. சண்முகம் தனது இருக்கையில் இருந்து எழுந்து ஆவேசமாக கத்த துவங்கினார். இதனையடுத்து சபாநாயகர் உங்களுடைய பெயரை எழுதி இருக்கேன். பேச அனுமதி அளிப்பேன் என சமாதானம் செய்வதற்கு முயற்சி செய்தார்.

சி.வி. சண்முகம் திடீர் ஆவேசம்

ஆனாலும் சி.வி. சண்முகம் கோபமாக கத்தி அவையை விட்டு வெளியேறுவதற்கு முயற்சி செய்தார். அப்போதும் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் முன்னாள் சட்ட அமைச்சருக்கு பேச அனுமதி உண்டு. உங்களை பேச அழைப்பேன். அமைதியாக உட்காருங்கள் என்றார். அதனை கேட்காமல் தளவாய் சுந்தரத்தை நோக்கி கையை நீட்டி சி.வி. சண்முகம் தொடர்ந்து கொந்தளித்தார். அதன்பின்னர் பிற உறுப்பினர்கள் அவரை சமாதானம் செய்து அமர வைத்தனர்.

முக்கிய கோரிக்கை

இது சம்பந்தமான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனையடுத்து சக அதிமுக உறுப்பினரான தளவாய் சுந்தரத்திற்கு பேச அனுமதி அளிக்கப்பட்டதற்கு எதிராக சி.வி. சண்முகம் அவையிலே கொந்தளித்துள்ளது பெரும் பரபரப்பினை கிளப்பியுள்ளது. இதற்கிடையில் தனது உரையின் போது ‘சென்னை உயர் நீதிமன்றம்’ என்பதை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என மாற்றம் செய்ய வேண்டுமென சி.வி. சண்முகம் கோரிக்கையை முன்வைத்தார்.

தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என மாற்ற வேண்டும்

இது சம்பந்தமாக பேசிய அவர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, ‘சென்னை உயர் நீதிமன்றம்’ என்று மாற்ற தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசு தீர்மானம் அனுப்பினார். அப்போது இருந்த அரசு நாடாளுமன்றத்தில் அதற்கான சட்டமுன்வடிவை கொண்டு வந்தது. ஆனால் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் பெயர் மாற்ற பிரச்சனை காரணமாக அந்த சட்டத்திருத்தம் திரும்ப பெறப்பட்டது. அதன்பின்னர் சென்னை உயர்நீதிமன்றம் என்பது சென்னை மட்டுமே உரியது என்பதை போன்று தோற்றமளிக்கும்.

CM விஜய் தீர்மானம் நிறைவேறியது ! சட்டமன்றத்தில் சற்று நேரம் பரபரப்பு

எனவே அதை ‘தமிழ்நாடு உயர் நீதிமன்றம்’ என்று மாற்ற வேண்டுமென ஜெயலலிதா வலியுறுத்தினார்கள். ஆகவே, மெட்ராஸ் உயர் நீதிமன்றம் என்பதை ‘தமிழ்நாடு உயர் நீதிமன்றம்’ என மாற்றுவதற்கு தனித் தீர்மானத்தை இன்றைய நாளில் கொண்டு வந்து, அந்த வரலாற்று பெருமையை பெற வேண்டும். இவ்வாறு சி.வி. சண்முகம் தனது உரையில் கோரிக்கையை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link