தமிழக சட்டப்பேரவை 3 நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று மீண்டும் கூடியது. இந்நிலையில், முதலமைச்சர் விஜய் பதிலுரை அளித்தார். அப்போது, தி.மு.க மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை அடுக்கிய நிலையில் அதற்கு தி.மு.க எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
எஸ்.பி வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: இதற்கு பின் என்ன நடக்கும் என கடவுளுக்குத் தான் தெரியும்; ஐகோர்ட் அதிருப்தி
இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ள பதிவில், வரலாறு பேச வேண்டுமென்றால், நீதிக்கட்சி காலத்திலிருந்து தொடங்க வேண்டும். இந்தத் தமிழ்ச் சமூகத்துக்காக நாங்கள் என்ன செய்தோம் என்பதிலிருந்து தொடங்க வேண்டும். ஆனால், த.வெ.க-விற்கும், அதன் முதலமைச்சர் ஜோசப் விஜய்-க்கும் அந்த வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
தலைவர் கலைஞரைப் பற்றியோ, தி.மு.க.வைப் பற்றியோ அவதூறாகப் பேசுவதையே அரசியல் தகுதியாக இன்னும் எத்தனை காலத்திற்கு நினைத்துக் கொள்ளப்போகிறார்கள் என்று தெரியவில்லை. எல்லாவற்றையும் நம்புவதற்கு ஒரு கூட்டம் இருக்கும் வரை, எதை வேண்டுமானாலும் பேசுவதற்கு ஒரு கூட்டமும் இருந்துகொண்டுதான் இருக்கும்.
காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதிலுரை அளிக்க வேண்டிய முதலமைச்சர், எழுதிக் கொடுத்ததைப் படிப்பதைத் தவிர, கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் சொல்ல முடியாமல், நீண்ட சொற்பொழிவை நிகழ்த்திவிட்டு, எதிர்வினை வந்துவிடுமோ என்ற பயத்தில் விவாதத்தையே சபாநாயகர் தவிர்த்திருக்கிறார்.
வரலாறு பேச வேண்டுமென்றால், நீதிக்கட்சி காலத்திலிருந்து தொடங்க வேண்டும். இந்தத் தமிழ்ச் சமூகத்துக்காக நாங்கள் என்ன செய்தோம் என்பதிலிருந்து தொடங்க வேண்டும். ஆனால், தவெகவிற்கும், அதன் முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கும் அந்த வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
தலைவர்…
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) September 7, 2026
கடந்த மூன்று நாட்களாக காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்க ஒத்திகை பார்த்தும், அந்த மானியக் கோரிக்கை தொடர்பாக முதலமைச்சர் பேசியது சொற்பமே. மற்றவை எல்லாம் காலம் காலமாகப் பரப்பப்பட்ட வதந்திகளையும், சமீபத்திய வாட்ஸ் அப் பொய்களையும் கலந்து, முதலமைச்சருக்கு ஒரு பிரதியைக் கொடுத்துவிட்டார்கள் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
சட்டம்-ஒழுங்கு குறித்தும், குழந்தைகள் & பெண்களின் பாதுகாப்பு குறித்தும், பிற மக்கள் பிரச்சனைகள் குறித்தும் பேச வேண்டிய சபை, இன்று சர்க்கஸ் கூடாரமாக மாறியிருக்கிறது. ஒன்று மட்டும் சொல்லத் தோன்றுகிறது ‘சத்தமாக பேசும் எதுவும் உண்மை ஆகாது’ என்று குறிப்பிட்டு உள்ளார்.
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அளித்துள்ள பேட்டியில், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பல்வேறு விதமான குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். இன்றைய சட்டமன்ற பதிலுரையில் தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப விஜய் பதில் அமையவில்லை. மாறாக தி.மு.க-வை மட்டுமே தாக்குவதற்கு விஜய் சட்டமன்ற நிகழ்வை பயன்படுத்தி உள்ளார்.
முதல்வர் விஜய்யின் பதில் சினிமா பாணியில்தான் இருக்கிறது. இந்த பேச்சு லைவ்-க்கு நன்றாகயிருக்கும், ஆனால் லைஃப்-க்கு நன்றாக இருக்காது. தனது ரசிகர்களை மகிழ்விக்கவே முதல்வர் விஜய் பேரவையில் பேசியுள்ளார். எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பை கொடுக்காமல் பேரவையில் இருந்து வெளியேற்றியது முறையான செயல் அல்ல. மக்கள் கொடுத்த வாய்ப்பை முதல்வர் விஜய் வீணடித்துவிட்டார்.
