சட்டவிரோதமாகப் பதுக்கி வைத்திருந்த பட்டாசு வெடித்து விபத்து-புது மாப்பிள்ளை படுகாயம்

ஈரோடு மாவட்டம் நசியனூர் ஜிஹெச் சாலையில் குடியிருந்து வருபவர் காமராஜர், பழனியம்மாள் குடும்பத்தினர், இவர்கள் உணவகம் மற்றும் பட்டாசுக் கடை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு சூர்யா என்ற மகன் உள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பாக தான் சூர்யாவுக்கு திருமணம் நடந்துள்ளது. இன்று வீட்டில் சூர்யா மற்றும் அவரது மனைவி இருந்துள்ளனர்.

இந்நிலையில் சட்டவிரோதமாக அவரது வீட்டில் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்துள்ளார். இந்த சூழலில் இன்று மதியம் வைக்கப்பட்டிருந்த அந்த பட்டாசுகள் முழுவதுமாக வெடித்து வீடு மற்றும் வீட்டின் முன் பக்கம் முழுவதும் சேதம் அடைந்ததுடன், வீட்டில் இருந்த சூர்யாவும் படுகாயம் அடைந்தார். இதைப் பார்த்து அவரது குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் விரைந்து வந்து விபத்தில் படுகாயம் அடைந்த சூர்யாவை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சூர்யாவை பரிசோதித்த மருத்துவர் 50 சதவீதம் தீக்காயம் அடைந்து இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து சம்பவ இடத்திற்கு கலெக்டர் கந்தசாமி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி ஆகியோர் வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

கலெக்டர், எஸ்பி நடத்திய ஆய்வில் வீட்டில் சட்ட விரோதமாக பட்டாசுகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Source link