சந்தோஷ் பிரதப் நடிக்கும் ‘சிக்னல் அட் 11.30’!

மலர்விழி நடேசன் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப், பவ்யா த்ரிகா பூஜிதா பொன்னடா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘சிக்னல் அட் 11.30’. தயாரிப்பாளர்கள் மலர்விழி நடேசன், ஷிவானி சுப்ரமணி தயாரித்துள்ள இப்படத்தை அலார் ஸ்டுடியோஸ் வழங்குகிறது. டி இமான் இசையமைத்துள்ளார். 

இப்படம் குறித்து இயக்குநர் மலர்விழி நடேசன் பேசுகையில், “ஒரு சாதாரண தனிநபரின் வாழ்க்கையில் 11.30 மணிக்கு வரும் பிரச்சனை தான் கதை. காலையா மாலையா என்பது படம் பார்க்கும் போது உங்களுக்கு புரியும். மெசேஜ் சொல்லும் படம் இது கிடையாது. முழுக்க முழுக்க பொழுதுபோக்கான படம். அதே சமயம் படம் முடிந்து வெளியில் வரும் போது மக்கள் எதை எடுத்துகொள்கிறார்களோ அதுதான் மெசேஜ். எல்லா வயது ரசிகர்களும் இப்படத்தை பார்க்கலாம்” என்றார். 

Source link