கோவை: தமிழகத்தில் ‘சூப்பர் சிஎம்’ ஆக முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் செயல்படுகிறார் என அண்ணாமலை கூறினார். கோவை தெற்கு தொகுதியில் எம்எல்ஏ வானதிசீனிவாசன் மேற்கொண்ட சிறப்பு பணிகள் குறித்த தன்னார்வ அமைப்பின் ஆய்வறிக்கை வெளியீட்டு நிகழ்வு, கோவை கணபதியில் நேற்று நடந்தது.
நிகழ்வில் பங்கேற்ற பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தி யாளர்களிடம் கூறியதாவது: வானதி சீனிவாசன் கோவையின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் 5 நாட்கள் மருத்துவமனையில் இருந்தார்.
